• Nov 22 2024

சமஷ்டி தீர்வை அடைவதற்கு பீனிக்ஸ் பறவை போல நாங்கள் எழ வேண்டும்...! யாழில் சுமந்திரன் எம்.பி அறைகூவல்...!

Sharmi / Jul 29th 2024, 2:00 pm
image

மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அண்ணன் அமிர்தலிங்கம் போல தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமை சமஸ்டி நோக்கி நகர வழியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். 

நேற்றையதினம்(28)  யாழ் தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம் பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நினைவேந்தல் நிகழ்வுகள் நம்பிக்கை தருவதாக அமைய வேண்டுமே அல்லாமல் ஒப்பாரிகளுடன்  மட்டும் முடிவடைய கூடாது.

1977 ஆம் ஆண்டு பிரச்சார மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரப் கூறும் போது தமிழ் மக்களுக்கு மறைந்த அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் பெற்று தராவிட்டாலும் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவேன் என மேடைகளில் முழங்கினார்.

மறைந்த தொண்டமான் சமஸ்டித் தீர்வை எட்டுவதில் ஒரு அங்கமாக செயற்பட்டவர் என்ற நீதியில் வடக்கு கிழக்கில் வாழும் மலையகத் தமிழ மக்களையும் ஒன்றிணைத்து செயல்படும்போது எமது இலக்கை உறுதியாகக் கொண்டு செல்ல முடியும்.

அஷ்ரப் அமிர்தலிங்கத்திடம் காணப்பட்ட ஒற்றுமையும் தமிழின உணர்வும் எந்தளவு தூரம் இருவரிடமும்  காணப்பட்டதற்கு வேறு உதாரணங்கள் தேவையில்லை. 

தற்போது சிலர் ஒற்றுமை எனக் கூறுகிறார்கள்.  தேர்தல் காலங்களில் வருகின்ற ஒற்றுமை பின்னர் பிரிந்து அரசியல் செய்வது இதுதான் எங்களிடம் காணப்படுகின்ற தற்போதைய ஒற்றுமை. 

அஷ்டப் அமிர்தலிங்கம் போன்றவர்கள் ஒற்றுமை தமிழ்  முஸ்லிம் மக்களிடம் ஏற்படுத்துவது சமஸ்தி நோக்கிய பயணத்தை பலமாக்கும்.

தமிழ் மக்களுக்கு சமஸ்தி கட்டமைப்பு வேண்டும் வீரப் பேச்சுக்கள் பேசுவதால் பயனேதும் கிட்ட போவதில்லை மூளையை உபயோகித்து எமது அரசியலை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் 75 வீதமான சிங்களவர்கள் மீதமுள்ள 25 வீதமான தமிழ் பேசும் மக்களை ஒன்றனைத்தால் பாராளுமன்றத்தில் சுமார் 50 ஆசனங்களையாவது  பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை இருந்தால் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் பேசும் மக்கள் காணப்படுவார்கள். 

நாங்கள் வாக்களிக்காவிட்டால் தெற்கு பலமாக அமைந்து விடும் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சந்தர்ப்பங்களில் எமது வாக்குகள் பேரம் பேசும் சக்தியாக மாறும். 

இந்தப் பேரம் பேசும் சக்தியாக அரசியல் தலைமைகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கும்போது எமது மக்களுக்கு பயன்பெறக்கூடியதாக அமையும். 

ஆகவே சமஷ்டி தீர்வை நோக்கிய பயணத்தில் அதனை அடைவதற்கு சாம்பலில் இருந்து புறப்படும் பீனிக்ஸ பறவை போல நாங்கள் எழ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சமஷ்டி தீர்வை அடைவதற்கு பீனிக்ஸ் பறவை போல நாங்கள் எழ வேண்டும். யாழில் சுமந்திரன் எம்.பி அறைகூவல். மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அண்ணன் அமிர்தலிங்கம் போல தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமை சமஸ்டி நோக்கி நகர வழியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். நேற்றையதினம்(28)  யாழ் தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம் பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், நினைவேந்தல் நிகழ்வுகள் நம்பிக்கை தருவதாக அமைய வேண்டுமே அல்லாமல் ஒப்பாரிகளுடன்  மட்டும் முடிவடைய கூடாது.1977 ஆம் ஆண்டு பிரச்சார மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரப் கூறும் போது தமிழ் மக்களுக்கு மறைந்த அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் பெற்று தராவிட்டாலும் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவேன் என மேடைகளில் முழங்கினார்.மறைந்த தொண்டமான் சமஸ்டித் தீர்வை எட்டுவதில் ஒரு அங்கமாக செயற்பட்டவர் என்ற நீதியில் வடக்கு கிழக்கில் வாழும் மலையகத் தமிழ மக்களையும் ஒன்றிணைத்து செயல்படும்போது எமது இலக்கை உறுதியாகக் கொண்டு செல்ல முடியும்.அஷ்ரப் அமிர்தலிங்கத்திடம் காணப்பட்ட ஒற்றுமையும் தமிழின உணர்வும் எந்தளவு தூரம் இருவரிடமும்  காணப்பட்டதற்கு வேறு உதாரணங்கள் தேவையில்லை. தற்போது சிலர் ஒற்றுமை எனக் கூறுகிறார்கள்.  தேர்தல் காலங்களில் வருகின்ற ஒற்றுமை பின்னர் பிரிந்து அரசியல் செய்வது இதுதான் எங்களிடம் காணப்படுகின்ற தற்போதைய ஒற்றுமை. அஷ்டப் அமிர்தலிங்கம் போன்றவர்கள் ஒற்றுமை தமிழ்  முஸ்லிம் மக்களிடம் ஏற்படுத்துவது சமஸ்தி நோக்கிய பயணத்தை பலமாக்கும்.தமிழ் மக்களுக்கு சமஸ்தி கட்டமைப்பு வேண்டும் வீரப் பேச்சுக்கள் பேசுவதால் பயனேதும் கிட்ட போவதில்லை மூளையை உபயோகித்து எமது அரசியலை மேற்கொள்ள வேண்டும்.இலங்கையில் 75 வீதமான சிங்களவர்கள் மீதமுள்ள 25 வீதமான தமிழ் பேசும் மக்களை ஒன்றனைத்தால் பாராளுமன்றத்தில் சுமார் 50 ஆசனங்களையாவது  பெற்றிருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை இருந்தால் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் பேசும் மக்கள் காணப்படுவார்கள். நாங்கள் வாக்களிக்காவிட்டால் தெற்கு பலமாக அமைந்து விடும் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சந்தர்ப்பங்களில் எமது வாக்குகள் பேரம் பேசும் சக்தியாக மாறும். இந்தப் பேரம் பேசும் சக்தியாக அரசியல் தலைமைகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கும்போது எமது மக்களுக்கு பயன்பெறக்கூடியதாக அமையும். ஆகவே சமஷ்டி தீர்வை நோக்கிய பயணத்தில் அதனை அடைவதற்கு சாம்பலில் இருந்து புறப்படும் பீனிக்ஸ பறவை போல நாங்கள் எழ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement