• May 12 2024

வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட எமக்கு இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லை! புலம்பும் மொட்டு பெண் எம்.பி

Chithra / Jan 5th 2023, 2:23 pm
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்ட போதும் மே மாதம் 09 திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட தமக்கு இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லை என பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த வருடம் மே மாதம் 09 திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது தனது வீட்டினை மக்கள் விடுதலை முன்னணியினரே எரித்திருந்ததாக பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன சபையில் இன்று தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தனது வீடு ஒரு வருடத்திற்கு முன்பதாகவே புதிதாக தனது தந்தை நிர்மானித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது வீடு இல்லாத நிலையில் தான் அரசாங்கம் வழங்கிய வீட்டில் வசிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஒருநிலையில் சந்திம வீரக்கொடி தமக்கு 200 இலட்சம் வழங்கப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக கோகிலா குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அரசில் இலாபங்களுக்காக இவ்வாறு வெளிப்படுத்தப்படும் கருத்தினால் தமக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை அரசாங்கத்திடமிருந்து ஒரு ரூபாவை கூட பெற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

9 மாதங்கள் நிறைவடைந்த போதும் கூட தமக்கு இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்

வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட எமக்கு இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லை புலம்பும் மொட்டு பெண் எம்.பி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்ட போதும் மே மாதம் 09 திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட தமக்கு இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லை என பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன சபையில் இன்று தெரிவித்துள்ளார்.குறிப்பாக கடந்த வருடம் மே மாதம் 09 திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது தனது வீட்டினை மக்கள் விடுதலை முன்னணியினரே எரித்திருந்ததாக பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன சபையில் இன்று தெரிவித்தார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.தனது வீடு ஒரு வருடத்திற்கு முன்பதாகவே புதிதாக தனது தந்தை நிர்மானித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.தற்போது வீடு இல்லாத நிலையில் தான் அரசாங்கம் வழங்கிய வீட்டில் வசிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான ஒருநிலையில் சந்திம வீரக்கொடி தமக்கு 200 இலட்சம் வழங்கப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக கோகிலா குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.அரசில் இலாபங்களுக்காக இவ்வாறு வெளிப்படுத்தப்படும் கருத்தினால் தமக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதுவரை அரசாங்கத்திடமிருந்து ஒரு ரூபாவை கூட பெற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.9 மாதங்கள் நிறைவடைந்த போதும் கூட தமக்கு இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்

Advertisement

Advertisement

Advertisement