மஹா கனதராவ குளத்தை நீராதாரமாக கொண்ட அனுராதபுரம் நீர் வேலைத் திட்டத்தை இன்று (15) மக்கள் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்தார்.
வேலைத் திட்டத்திற்கான எதிர்ப்பு குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, நீர்த்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், எதிர்ப்புக்களை கைவிடுமாறும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிந்துக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அது தொடர்பிலான மக்களின் யோசனைகளை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத்தருமாறும், அவற்றில் சாதகமான விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹா கனதார குளத்தை அண்மித்து வசிக்கு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புவதாக மஹாகனதார ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் சுபசிங்க ரத்நாயக்க தெரிவித்தார்.
”இந்த வேலைத் திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை இடைநடுவில் கைவிட முடியாது. நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவரையில் எல்லா அரசாங்கத்திலும் நீர் வழங்கல் சபை ஒரு அமைச்சின் கீழும் நீர்ப்பாசன திணைக்களம் ஒரு அமைச்சின் கீழும் காணப்பட்டது.
இம்முறை அவை இரண்டையும் ஒன்றிணைத்து ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் இந்த வேலைத் திட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்போம்- ஜனாதிபதி தெரிவிப்பு. மஹா கனதராவ குளத்தை நீராதாரமாக கொண்ட அனுராதபுரம் நீர் வேலைத் திட்டத்தை இன்று (15) மக்கள் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்தார்.வேலைத் திட்டத்திற்கான எதிர்ப்பு குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, நீர்த்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், எதிர்ப்புக்களை கைவிடுமாறும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிந்துக்குமாறும் கேட்டுக்கொண்டார்.அது தொடர்பிலான மக்களின் யோசனைகளை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத்தருமாறும், அவற்றில் சாதகமான விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹா கனதார குளத்தை அண்மித்து வசிக்கு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புவதாக மஹாகனதார ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் சுபசிங்க ரத்நாயக்க தெரிவித்தார்.”இந்த வேலைத் திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை இடைநடுவில் கைவிட முடியாது. நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவரையில் எல்லா அரசாங்கத்திலும் நீர் வழங்கல் சபை ஒரு அமைச்சின் கீழும் நீர்ப்பாசன திணைக்களம் ஒரு அமைச்சின் கீழும் காணப்பட்டது. இம்முறை அவை இரண்டையும் ஒன்றிணைத்து ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் இந்த வேலைத் திட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.