• Aug 12 2026

அரசைச் சீர்குலைக்க மாட்டோம்; ஆனால், தவறான போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் மதுபாஷண ரணசிங்க வலியுறுத்து

dorin / Aug 12th 2026, 11:00 am
image

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, ஜனநாயகத்திற்கான சமூக ஊடகவியலாளர் அமைப்பின் மதுபாஷண ரணசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது எங்களுக்குக் கோபமும், அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளும் உள்ளன என்பதை நாங்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறோம். எனினும், ஒருபோதும் அரசையோ அல்லது நாட்டின் கட்டமைப்பையோ சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடமாட்டோம்.

கொரோனா அசாதாரண சூழ்நிலை நிலவிய காலத்தில், நாட்டின் சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்து கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அன்றைய அரசாங்கத்தில் இருந்த முக்கிய தலைவர்கள் ஒரு மாதம் டாலர் அனுப்புவதை நிறுத்துமாறு வெளிநாடு வாழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். 

ஆனால், நாங்கள் அத்தகைய தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடமாட்டோம். அரசாங்கத்துடன் முரண்பாடுகள் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) சலுகை ரத்தாகும் அபாயம் குறித்து நாங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். 

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமைகளைத் தெளிவுபடுத்தி வருகிறோம். அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் எதிரானவர்கள் என்றாலும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் அது நாட்டின் ஆடைத் தொழில் துறையையும், ஏழை எளிய தொழிலாளர்களையுமே கடுமையாகப் பாதிக்கும்.

இன்று ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் சொகுசு பங்களாக்களையும், பல கோடி மதிப்பிலான வாகனங்களையும் அனுபவித்து வருகிறார்கள். ஆனால், நாட்டின் பொருளாதாரத்திற்குத் தூணாக விளங்கும் ஆடைத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் ஏற்றுமதித் துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் நாட்டின் விவகாரங்களைச் சரியாகக் கையாளத் தெரியாத திறமையற்ற நிர்வாகத்தினாலேயே இவ்வாறான நெருக்கடிகள் எழுகின்றன. ஒருவேளை ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இழக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புகள் பறிபோனால், அதற்கு முழுப்பொறுப்பையும் இந்த அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


அரசைச் சீர்குலைக்க மாட்டோம்; ஆனால், தவறான போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் மதுபாஷண ரணசிங்க வலியுறுத்து கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, ஜனநாயகத்திற்கான சமூக ஊடகவியலாளர் அமைப்பின் மதுபாஷண ரணசிங்க இவ்வாறு தெரிவித்தார்.தற்போதைய அரசாங்கத்தின் மீது எங்களுக்குக் கோபமும், அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளும் உள்ளன என்பதை நாங்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறோம். எனினும், ஒருபோதும் அரசையோ அல்லது நாட்டின் கட்டமைப்பையோ சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடமாட்டோம்.கொரோனா அசாதாரண சூழ்நிலை நிலவிய காலத்தில், நாட்டின் சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்து கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அன்றைய அரசாங்கத்தில் இருந்த முக்கிய தலைவர்கள் ஒரு மாதம் டாலர் அனுப்புவதை நிறுத்துமாறு வெளிநாடு வாழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், நாங்கள் அத்தகைய தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடமாட்டோம். அரசாங்கத்துடன் முரண்பாடுகள் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) சலுகை ரத்தாகும் அபாயம் குறித்து நாங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமைகளைத் தெளிவுபடுத்தி வருகிறோம். அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் எதிரானவர்கள் என்றாலும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் அது நாட்டின் ஆடைத் தொழில் துறையையும், ஏழை எளிய தொழிலாளர்களையுமே கடுமையாகப் பாதிக்கும்.இன்று ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் சொகுசு பங்களாக்களையும், பல கோடி மதிப்பிலான வாகனங்களையும் அனுபவித்து வருகிறார்கள். ஆனால், நாட்டின் பொருளாதாரத்திற்குத் தூணாக விளங்கும் ஆடைத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் ஏற்றுமதித் துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது.சர்வதேச ரீதியில் நாட்டின் விவகாரங்களைச் சரியாகக் கையாளத் தெரியாத திறமையற்ற நிர்வாகத்தினாலேயே இவ்வாறான நெருக்கடிகள் எழுகின்றன. ஒருவேளை ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இழக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புகள் பறிபோனால், அதற்கு முழுப்பொறுப்பையும் இந்த அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement