வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் யாரும் வருகை தரவில்லை, வருகை தந்த கோட்டக்கல்வி பணிப்பாளர் உரிய பதிலை தரவில்லை எனக்கூறி பாடசாலையில் இருந்து மாணவர்களை வீடுகளுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் உரிய தீர்வு கிடைக்கும் வரை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் பாடசாலை வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பாடசாலை வாயில் கதவை மூடி காலை 7.30 தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களை பாடசாலை வளாகத்துக்குள் அனுப்பிய போதும் அதிபர் ஆசிரியர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை இந்நிலையில் குறித்த இடத்துக்கு அதிகாரிகள் வரும்வரை தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டர்
இதனைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் வருகை தந்திருந்தார் வருகை தந்த கோட்டக்கல்வி பணிப்பாளர் பாடசாலை பெற்றோர்களில் இருந்து ஐவரை பாடசாலைக்குள்ளே கலந்துரையாட வருகை தருமாறு அழைத்ததன் அடிப்படையில் பெற்றோர் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தமது கோரிக்கைகளுக்கு சரியான பதிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் தரவில்லை எனவும் அவர் பிரச்சினைகள சமாளிப்பதாக இருந்ததாகவும் வலயத்திலிருந்து அதிகாரிகளை அழைத்து தீர்வை பெற்று தருமாறு கோரிய போதும் உரிய வகையில் தமக்கான பதில் வழங்கப்படாத நிலையில் அவருடைய பதில்கள் திருப்தியற்ற நிலையிலும் இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் தெரிவித்து பாடசாலையில் இருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
இந்நிலையில் தமக்கான உரிய பதிலை உரிய தரப்புகள் வழங்காத நிலையில் தீர்வு கிடைக்கும் வரை தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்
உரிய தீர்வு கிடைக்கும் வரை பாடசாலைக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம்; பெற்றோர் அதிரடி வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் யாரும் வருகை தரவில்லை, வருகை தந்த கோட்டக்கல்வி பணிப்பாளர் உரிய பதிலை தரவில்லை எனக்கூறி பாடசாலையில் இருந்து மாணவர்களை வீடுகளுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் உரிய தீர்வு கிடைக்கும் வரை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் பாடசாலை வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பாடசாலை வாயில் கதவை மூடி காலை 7.30 தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களை பாடசாலை வளாகத்துக்குள் அனுப்பிய போதும் அதிபர் ஆசிரியர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை இந்நிலையில் குறித்த இடத்துக்கு அதிகாரிகள் வரும்வரை தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டர்இதனைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் வருகை தந்திருந்தார் வருகை தந்த கோட்டக்கல்வி பணிப்பாளர் பாடசாலை பெற்றோர்களில் இருந்து ஐவரை பாடசாலைக்குள்ளே கலந்துரையாட வருகை தருமாறு அழைத்ததன் அடிப்படையில் பெற்றோர் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது தமது கோரிக்கைகளுக்கு சரியான பதிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் தரவில்லை எனவும் அவர் பிரச்சினைகள சமாளிப்பதாக இருந்ததாகவும் வலயத்திலிருந்து அதிகாரிகளை அழைத்து தீர்வை பெற்று தருமாறு கோரிய போதும் உரிய வகையில் தமக்கான பதில் வழங்கப்படாத நிலையில் அவருடைய பதில்கள் திருப்தியற்ற நிலையிலும் இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் தெரிவித்து பாடசாலையில் இருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.இந்நிலையில் தமக்கான உரிய பதிலை உரிய தரப்புகள் வழங்காத நிலையில் தீர்வு கிடைக்கும் வரை தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்