நாவிதன்வெளி பிரதேச சபைக்கு இனிவரும் காலங்களில் இன பாகுபாடுகள் இன்றி மக்களுக்கு சேவைகள் மேற்கொள்வோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.இதனூடாக எமது சமுதாயத்துக்கு தேவையான சேவைகளை பூர்த்தி செய்வோம் என நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் மோட்டார் சைக்கிள் சின்னம் சுயேச்சைக் குழு இலக்கம் -2 இல் போட்டியிடும் வேட்பாளர் காலீதீன் மனாசீர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைகளுக்காக சுயேட்சைக்குழு இலக்கம் -2 இல் மோட்டார் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று அம்பாறை மாவட்டம் சாளம்பைக்கேணி பகுதி அலுவலகத்தில் நடைபெற்றவேளை அங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்
நாவிதன்வெளி பிரதேச சபைக்கு எதிர்வரும் காலங்களில் மோட்டார் சைக்கிள் சின்னம் சுயேச்சைக் குழு இலக்கம் -2 இல் போட்டியிடும் நாங்கள் தெரிவு செய்யும் பட்சத்தில் அப்பிரதேச சபையில் இடம்பெறுகின்ற இன மத அடிப்படையிலான சில விடயங்களை மாற்றுவோம்.
அதாவது இன மத வேறுபாடு இல்லாமல் அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்யக் கூடியதாக எங்களது சமூகப் பணியை முன்னெடுப்போம்.
கடந்த காலங்களில் இந்த சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தங்களது வட்டாரங்களை சேர்ந்தவர்களுக்கும் வட்டாரங்களுக்கும் தான் அவர்களது பணியை முன்னெடுத்தார்கள்.
ஆனால் நாங்கள் அவ்வாறு இருக்கப் போவதில்லை.நாங்கள் இன மத பாகுபாடின்றி அனைத்து சமுதாயங்களுக்கும் எமது சேவைகளை மேற்கொள்வோம்.
கடந்த காலங்களில் இப்பிரதேச சபையில் பாகுபாடுகள் கூடிய பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது தமிழ் சமூகம் முஸ்லிம் சமூகங்கள் என்ற பாகுபாடு பார்த்து சேவைகள் செய்யப்பட்டது.
நாங்கள் சபையை கைப்பற்றினால் சபை நடவடிக்கையில் இவ்வாறான பாகுபாடுகள் இன்றி மக்களுக்கு சேவைகள் மேற்கொள்வோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இதனூடாக எமது சமுதாயத்துக்கு தேவையான சேவைகளை பூர்த்தி செய்வோம் என்றார்.
இன பாகுபாடுகள் இன்றி மக்களுக்கு சேவைகள் மேற்கொள்வோம் - வேட்பாளர் காலீதீன் மனாசீர் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு இனிவரும் காலங்களில் இன பாகுபாடுகள் இன்றி மக்களுக்கு சேவைகள் மேற்கொள்வோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.இதனூடாக எமது சமுதாயத்துக்கு தேவையான சேவைகளை பூர்த்தி செய்வோம் என நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் மோட்டார் சைக்கிள் சின்னம் சுயேச்சைக் குழு இலக்கம் -2 இல் போட்டியிடும் வேட்பாளர் காலீதீன் மனாசீர் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைகளுக்காக சுயேட்சைக்குழு இலக்கம் -2 இல் மோட்டார் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று அம்பாறை மாவட்டம் சாளம்பைக்கேணி பகுதி அலுவலகத்தில் நடைபெற்றவேளை அங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்நாவிதன்வெளி பிரதேச சபைக்கு எதிர்வரும் காலங்களில் மோட்டார் சைக்கிள் சின்னம் சுயேச்சைக் குழு இலக்கம் -2 இல் போட்டியிடும் நாங்கள் தெரிவு செய்யும் பட்சத்தில் அப்பிரதேச சபையில் இடம்பெறுகின்ற இன மத அடிப்படையிலான சில விடயங்களை மாற்றுவோம். அதாவது இன மத வேறுபாடு இல்லாமல் அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்யக் கூடியதாக எங்களது சமூகப் பணியை முன்னெடுப்போம்.கடந்த காலங்களில் இந்த சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தங்களது வட்டாரங்களை சேர்ந்தவர்களுக்கும் வட்டாரங்களுக்கும் தான் அவர்களது பணியை முன்னெடுத்தார்கள்.ஆனால் நாங்கள் அவ்வாறு இருக்கப் போவதில்லை.நாங்கள் இன மத பாகுபாடின்றி அனைத்து சமுதாயங்களுக்கும் எமது சேவைகளை மேற்கொள்வோம்.கடந்த காலங்களில் இப்பிரதேச சபையில் பாகுபாடுகள் கூடிய பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது தமிழ் சமூகம் முஸ்லிம் சமூகங்கள் என்ற பாகுபாடு பார்த்து சேவைகள் செய்யப்பட்டது.நாங்கள் சபையை கைப்பற்றினால் சபை நடவடிக்கையில் இவ்வாறான பாகுபாடுகள் இன்றி மக்களுக்கு சேவைகள் மேற்கொள்வோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இதனூடாக எமது சமுதாயத்துக்கு தேவையான சேவைகளை பூர்த்தி செய்வோம் என்றார்.