• Dec 21 2024

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றவர்களின் மற்றுமொரு ஆவணத்தை விரைவில் வெளியிடுவோம்- அமைச்சர் நலிந்த பகிரங்கம்..!

Sharmi / Dec 20th 2024, 10:00 am
image

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றவர்கள் தொடர்பான மற்றொரு ஆவணம் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம்(19) இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டுமுதல் 2024ஆம் ஆண்டு வரை அரசியல்வாதிகள் பெற்ற பணத்தை மாத்திரமே தாம் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்ததாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி நிதியம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராயப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1978 ஆம் ஆண்டின் ஜனாதிபதி நிதியச் சட்டம், 5 குறிப்பிட்ட வகைகளின் கீழ் பணம் வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

இதய அறுவை சிகிச்சைக்கு அல்லது ஏதாவது சிகிச்சைக்கு பொதுவாக ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பது நம் நாட்டு மக்களுக்கு அனுபவம் உள்ளது.

கேட்ட தொகை கிடைக்காது. கடிதங்களை நிரப்புவது மிகவும் சிரமமாக இருக்கும்.

2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான குறிப்பிட்ட காலப் பகுதியில் அரசியல்வாதிகள் பெற்ற பணத்தையே நான் முன்வைத்தேன்.

அதற்கு முன் சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலும் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது.

நான் முன்வைத்த ஆவணங்களுக்கு மேலதிகமாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள் இவ்வாறு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றுள்ளனர்.

இது உண்மையில் ஒரு தார்மீக பிரச்சினை. இந்த பணம் சிலருக்கு, 110,000,000 ரூபாய், தவணை முறையில் அல்ல, நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண நபருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் தவணை முறையிலே வழங்கப்படும்.

அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பெரிய கரண்டியால் பங்கிட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், மீதமுள்ள ஆவணம் எதிர்காலத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது  எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றவர்களின் மற்றுமொரு ஆவணத்தை விரைவில் வெளியிடுவோம்- அமைச்சர் நலிந்த பகிரங்கம். கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றவர்கள் தொடர்பான மற்றொரு ஆவணம் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றையதினம்(19) இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.2005ஆம் ஆண்டுமுதல் 2024ஆம் ஆண்டு வரை அரசியல்வாதிகள் பெற்ற பணத்தை மாத்திரமே தாம் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்ததாக தெரிவித்தார்.எவ்வாறாயினும் ஜனாதிபதி நிதியம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.1978 ஆம் ஆண்டின் ஜனாதிபதி நிதியச் சட்டம், 5 குறிப்பிட்ட வகைகளின் கீழ் பணம் வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இதய அறுவை சிகிச்சைக்கு அல்லது ஏதாவது சிகிச்சைக்கு பொதுவாக ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பது நம் நாட்டு மக்களுக்கு அனுபவம் உள்ளது. கேட்ட தொகை கிடைக்காது. கடிதங்களை நிரப்புவது மிகவும் சிரமமாக இருக்கும். 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான குறிப்பிட்ட காலப் பகுதியில் அரசியல்வாதிகள் பெற்ற பணத்தையே நான் முன்வைத்தேன். அதற்கு முன் சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலும் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது.நான் முன்வைத்த ஆவணங்களுக்கு மேலதிகமாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள் இவ்வாறு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றுள்ளனர்.இது உண்மையில் ஒரு தார்மீக பிரச்சினை. இந்த பணம் சிலருக்கு, 110,000,000 ரூபாய், தவணை முறையில் அல்ல, நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.சாதாரண நபருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் தவணை முறையிலே வழங்கப்படும்.அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பெரிய கரண்டியால் பங்கிட்டுக் கொண்டுள்ளனர்.இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், மீதமுள்ள ஆவணம் எதிர்காலத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement