எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல சபைகளில் நாம் அதிக ஆசனங்களை கைப்பற்றுவோமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் தியாகராஜா பிராபாதரன் தெரிவித்தார்.
மூதூர் -இருதயபுரம் வட்டாரக் கட்சி காரியாலய திறப்பு விழா மணற்சேனையில் நேற்றையதினம்(21) மாலை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் முதன்முதலாக எமது ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது.
இதற்காக நாம் சிறந்த வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளோம்.இதனால் எமது கட்சிக்கான ஆதரவானது பொதுமக்களிடமிருந்து கிடைத்து வருகிறது.
எமது வேட்பாளர்கள் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாதவர்கள், மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாகச் செய்யக் கூடிய திறமையானவர்கள்.
ஆகவேதான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அதிக சபைகளில் கணிசமான உறுப்பினர்களை எமது கட்சி பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மிளிரும் எனவும் தெரிவித்தார்.
கட்சியின் மூதூர் பிரதேச சபையின் தலைமை வேட்பாளர் அகிலேசப்பிள்ளை உதயகுமார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் தியாகராஜா பிரபாதரன் ,கட்சியின் பிரதேச சபை வேட்பாளர்கள்,கிராம மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
திருமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவோம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி நம்பிக்கை. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல சபைகளில் நாம் அதிக ஆசனங்களை கைப்பற்றுவோமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் தியாகராஜா பிராபாதரன் தெரிவித்தார்.மூதூர் -இருதயபுரம் வட்டாரக் கட்சி காரியாலய திறப்பு விழா மணற்சேனையில் நேற்றையதினம்(21) மாலை இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,திருகோணமலை மாவட்டத்தில் முதன்முதலாக எமது ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது.இதற்காக நாம் சிறந்த வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளோம்.இதனால் எமது கட்சிக்கான ஆதரவானது பொதுமக்களிடமிருந்து கிடைத்து வருகிறது.எமது வேட்பாளர்கள் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாதவர்கள், மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாகச் செய்யக் கூடிய திறமையானவர்கள்.ஆகவேதான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அதிக சபைகளில் கணிசமான உறுப்பினர்களை எமது கட்சி பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மிளிரும் எனவும் தெரிவித்தார். கட்சியின் மூதூர் பிரதேச சபையின் தலைமை வேட்பாளர் அகிலேசப்பிள்ளை உதயகுமார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் தியாகராஜா பிரபாதரன் ,கட்சியின் பிரதேச சபை வேட்பாளர்கள்,கிராம மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.