யாழ்ப்பாணத்தில் காற்றின் தரக் குறியீடு (AQI) 200 என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.
இன்று (19) காலை வெளியிடப்பட்ட காற்றின் தரம் தொடர்பான அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து, சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.
இதற்கமைய, இன்று காலை 7.05 மணியளவில் பத்தரமுல்லையில் 179, கிளிநொச்சியில் 158, அநுராதபுரத்தில் 158, திருகோணமலையில் 151 மற்றும் சிலாபத்தில் 165 என்ற காற்றின் தரக் குறியீடுகள் பதிவாகியுள்ளன.
குறித்த பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மட்டத்தில் காணப்படுவதால், பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், தேவையற்ற வெளிப்புற நடமாட்டங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காற்றின் தரம் சீரடையும் வரை பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியுங்கள் வெளியில் செல்ல வேண்டாம் - யாழில் அதிகரித்த ஆபத்து யாழ்ப்பாணத்தில் காற்றின் தரக் குறியீடு (AQI) 200 என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.இன்று (19) காலை வெளியிடப்பட்ட காற்றின் தரம் தொடர்பான அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து, சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.இதற்கமைய, இன்று காலை 7.05 மணியளவில் பத்தரமுல்லையில் 179, கிளிநொச்சியில் 158, அநுராதபுரத்தில் 158, திருகோணமலையில் 151 மற்றும் சிலாபத்தில் 165 என்ற காற்றின் தரக் குறியீடுகள் பதிவாகியுள்ளன.குறித்த பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மட்டத்தில் காணப்படுவதால், பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், தேவையற்ற வெளிப்புற நடமாட்டங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், காற்றின் தரம் சீரடையும் வரை பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.