நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் (20ஆம் தேதி) முதல் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் வதுளை மாவட்டங்களைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று அதிக வெப்பநிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சப்ரகமுவ மாகாணம், மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதேபோல் நுவரெலியா மாவட்டத்திலும் மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளிலும் மாற்றம் காணப்படுகிறது. மன்னார் முதல் கொழும்பு, காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
மணிக்கு 20–30 கி.மீ வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும் என்றும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20ஆம் தேதி முதல் வானிலை மாற்றம். பொதுமக்களுக்கு அறிவிப்பு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் (20ஆம் தேதி) முதல் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் வதுளை மாவட்டங்களைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று அதிக வெப்பநிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும், சப்ரகமுவ மாகாணம், மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதேபோல் நுவரெலியா மாவட்டத்திலும் மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.கடல் பகுதிகளிலும் மாற்றம் காணப்படுகிறது. மன்னார் முதல் கொழும்பு, காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடும். மணிக்கு 20–30 கி.மீ வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும் என்றும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.