• May 12 2024

வவுனியாவில் கிராம அலுவலருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு ஏற்பட்ட நிலை...!samugammedia

Sharmi / Oct 23rd 2023, 10:20 pm
image

Advertisement

புளியங்குளம் வடக்கு கிராம அலுவலரை அச்சுறுத்தியமை,மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 8 பேர்  இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம அலுவலருக்கு தொடர்ச்சியாக கடமைக்கு இடையூறு விளைவித்து வந்த நபர்கள் தொடர்பில் புளியங்குளம் பாெலீஸ் நிலையத்தில் கிராம அலுவலரால் 3 தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையிருந்ததாக  கூறப்படுகிறது.

இந்நிலையில் கிராம அலுவலரின் பாதுகாப்பு கருதி பொலிசார் உரிய  நடவடிக்கையை விரைவாக வழங்க கோரி அழுத்தம் கொடுக்கும் முகமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 20 பிரிவுகளில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் அனைவரும் ஒருநாள் அடையாள சுகவீன போராட்டத்தை இன்று முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே புளியங்குளம் வடக்கு கிராம அலுவலரை அச்சுறுத்தியமை,மற்றும் அவரது கடமை களுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 8 பேர் மதியம் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர்  தலா 10 இலட்சம் பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வவுனியாவில் கிராம அலுவலருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு ஏற்பட்ட நிலை.samugammedia புளியங்குளம் வடக்கு கிராம அலுவலரை அச்சுறுத்தியமை,மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 8 பேர்  இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம அலுவலருக்கு தொடர்ச்சியாக கடமைக்கு இடையூறு விளைவித்து வந்த நபர்கள் தொடர்பில் புளியங்குளம் பாெலீஸ் நிலையத்தில் கிராம அலுவலரால் 3 தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையிருந்ததாக  கூறப்படுகிறது.இந்நிலையில் கிராம அலுவலரின் பாதுகாப்பு கருதி பொலிசார் உரிய  நடவடிக்கையை விரைவாக வழங்க கோரி அழுத்தம் கொடுக்கும் முகமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 20 பிரிவுகளில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் அனைவரும் ஒருநாள் அடையாள சுகவீன போராட்டத்தை இன்று முன்னெடுத்திருந்தனர்.இந்நிலையிலேயே புளியங்குளம் வடக்கு கிராம அலுவலரை அச்சுறுத்தியமை,மற்றும் அவரது கடமை களுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 8 பேர் மதியம் கைது  செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர்  தலா 10 இலட்சம் பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement