• Sep 20 2024

இலங்கை கிரிக்கெட் ரொஷானுக்கு கொடுத்த பணத்திற்கு நடந்தது என்ன? வெளிப்படுத்திய அமைச்சர் samugammedia

Chithra / Nov 21st 2023, 10:20 am
image

Advertisement


கிரிக்கட் நிறுவனத்தினால் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்ட பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான எழுத்து மூல ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று(20) தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய அரசியல் உரையாடலுடன் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அந்த பணத்தில் ஒரு பகுதி பாதணி இல்லாதவர்களுக்கு பாதணி வாங்கவும், மட்டை, பந்து, விளையாட மைதானம் இல்லாத குழந்தைகளுக்காக செலவிடப்பட்டதாக குறிப்பிட்டார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு இதே பணமே பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கையொப்பம் பெற்று 280 மில்லியன் காசோலைகள் கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், கிரிக்கெட் வீரர்கள் சம்பாதித்த பணம் தேவையற்ற விடயங்களுக்கு செலவிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.


000000000000000

06

கிரிக்கெட் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான நாடாளுமன்ற குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தின் போதே, இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த குழுவில் உள்ளடக்கப்படவுள்ளனர்.

அத்துடன், நேற்றைய கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தொடர்பில் ஆராயும் கோப் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த குழுவின் தலைவர் பதவி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறித்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் ரொஷானுக்கு கொடுத்த பணத்திற்கு நடந்தது என்ன வெளிப்படுத்திய அமைச்சர் samugammedia கிரிக்கட் நிறுவனத்தினால் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்ட பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான எழுத்து மூல ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று(20) தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய அரசியல் உரையாடலுடன் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.அந்த பணத்தில் ஒரு பகுதி பாதணி இல்லாதவர்களுக்கு பாதணி வாங்கவும், மட்டை, பந்து, விளையாட மைதானம் இல்லாத குழந்தைகளுக்காக செலவிடப்பட்டதாக குறிப்பிட்டார்.பல்வேறு சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு இதே பணமே பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இதேவேளை, கையொப்பம் பெற்று 280 மில்லியன் காசோலைகள் கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், கிரிக்கெட் வீரர்கள் சம்பாதித்த பணம் தேவையற்ற விடயங்களுக்கு செலவிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.00000000000000006கிரிக்கெட் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான நாடாளுமன்ற குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தின் போதே, இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன்படி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த குழுவில் உள்ளடக்கப்படவுள்ளனர்.அத்துடன், நேற்றைய கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தொடர்பில் ஆராயும் கோப் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அந்த குழுவின் தலைவர் பதவி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறித்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement