• Jan 06 2025

தென்னை உற்பத்தி வீழ்ச்சி மற்றும் தேங்காய் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன? விளக்கும் ஈ.சற்குணன்

Chithra / Dec 11th 2024, 3:54 pm
image

 தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கு செய்கையாளர்களின் பராமரிப்பு இன்மையும் ஒரு காரணம் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பதில் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தேங்காய் விலை அதிகரிப்புக்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. பசளை விநியோகமும் ஒன்று. 

தென்னைக்கு ஒவ்வொரு வருடமும் பசளையிட வேண்டும்.

இரசாயன பசளை கடந்த இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்தது. இதனால் பெருமளவு செய்கையாளர்கள் பசளை விநியோகத்தை மேற்கொள்ளவில்லை. 

பீடைகளின்  தாக்கமும்  காரணமாக விளங்குகின்றது. 

தென்னைக்கு தொடர்ந்து நீர் விநியோகம் செய்ய வேண்டும். சிலர் நான்கு ஐந்து வருடங்களோடு நீர் விநியோகத்தை நிறுத்துகின்றனர். 

இவ்வாறான சிறந்த பராமரிப்பு இன்மையும் தென்னை உற்பத்தியின் வீழ்ச்சிக்கும் விலை அதிகரிப்புக்கும் காரணம் எனவும், 

செய்கையாளர்கள் சரியான முறையில் பசளை மற்றும் நீர் விநியோகங்களை மேற்கொள்கின்ற போது உற்பத்தியை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்.

தென்னை உற்பத்தி வீழ்ச்சி மற்றும் தேங்காய் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன விளக்கும் ஈ.சற்குணன்  தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கு செய்கையாளர்களின் பராமரிப்பு இன்மையும் ஒரு காரணம் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பதில் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தேங்காய் விலை அதிகரிப்புக்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. பசளை விநியோகமும் ஒன்று. தென்னைக்கு ஒவ்வொரு வருடமும் பசளையிட வேண்டும்.இரசாயன பசளை கடந்த இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்தது. இதனால் பெருமளவு செய்கையாளர்கள் பசளை விநியோகத்தை மேற்கொள்ளவில்லை. பீடைகளின்  தாக்கமும்  காரணமாக விளங்குகின்றது. தென்னைக்கு தொடர்ந்து நீர் விநியோகம் செய்ய வேண்டும். சிலர் நான்கு ஐந்து வருடங்களோடு நீர் விநியோகத்தை நிறுத்துகின்றனர். இவ்வாறான சிறந்த பராமரிப்பு இன்மையும் தென்னை உற்பத்தியின் வீழ்ச்சிக்கும் விலை அதிகரிப்புக்கும் காரணம் எனவும், செய்கையாளர்கள் சரியான முறையில் பசளை மற்றும் நீர் விநியோகங்களை மேற்கொள்கின்ற போது உற்பத்தியை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement