• Oct 16 2026

மட்டக்களப்பு கடலில் நடப்பது என்ன? கொந்தளித்து வீதியில் இறங்கிய மீனவர்கள்!

Chithra / Oct 16th 2026, 1:56 pm
image


மட்டக்களப்பு கடற்பரப்பில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரி, மாவட்ட மீனவர்கள் இன்று (16) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் மற்றும் வாவி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


கிண்ணியா கருக்குப்பனைப் பகுதியிலிருந்து வருகை தரும் மீனவர்கள் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடுவதால், தங்களது வாழ்வாதாரமும் கடல் வளங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


குறிப்பாக, பாலமுனை மற்றும் பூனொச்சிமுனைப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதன்போது, 'ஏழை மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே', 'சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியை நிறுத்து', 'கிண்ணியா கருக்குப்பனையில் கடல் வளங்களை அழித்ததுபோன்று மட்டக்களப்பு கடல் வளங்களையும் அழிக்காதே' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாடுகளை முன்வைத்தபோதிலும், இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டனர்.


வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் சில மீனவர்கள் தங்களது சுயலாபத்திற்காக மட்டக்களப்பின் கடல் வளங்களை அழித்து வருவதாகவும், இதனால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால், தற்போதைய போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


அத்துடன், தங்களது பிரச்சினைகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டுசெல்லவுள்ளதாகவும், ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனிடையே, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி, தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிய மகஜர் ஒன்றும் மட்டக்களப்பு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.


இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) இணைப்பாளர் அந்தனி ராஜ்குமார் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் மீனவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

மட்டக்களப்பு கடலில் நடப்பது என்ன கொந்தளித்து வீதியில் இறங்கிய மீனவர்கள் மட்டக்களப்பு கடற்பரப்பில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரி, மாவட்ட மீனவர்கள் இன்று (16) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் மற்றும் வாவி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.கிண்ணியா கருக்குப்பனைப் பகுதியிலிருந்து வருகை தரும் மீனவர்கள் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடுவதால், தங்களது வாழ்வாதாரமும் கடல் வளங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.குறிப்பாக, பாலமுனை மற்றும் பூனொச்சிமுனைப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதன்போது, 'ஏழை மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே', 'சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியை நிறுத்து', 'கிண்ணியா கருக்குப்பனையில் கடல் வளங்களை அழித்ததுபோன்று மட்டக்களப்பு கடல் வளங்களையும் அழிக்காதே' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாடுகளை முன்வைத்தபோதிலும், இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டனர்.வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் சில மீனவர்கள் தங்களது சுயலாபத்திற்காக மட்டக்களப்பின் கடல் வளங்களை அழித்து வருவதாகவும், இதனால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால், தற்போதைய போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அத்துடன், தங்களது பிரச்சினைகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டுசெல்லவுள்ளதாகவும், ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி, தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிய மகஜர் ஒன்றும் மட்டக்களப்பு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) இணைப்பாளர் அந்தனி ராஜ்குமார் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் மீனவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement