• Aug 18 2026

வீட்டுத்திட்ட மிகுதி நிதி எங்கே? – அராலி மத்தியில் மக்கள் போராட்டம்

Chithra / Aug 18th 2026, 3:31 pm
image


வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி இன்றையதினம் அராலி மத்தி பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்கப்பட்டது. 


குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.


 சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமான போராட்டம் சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக நகர்ந்தது. அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதனைத் தொடர்ந்து சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் மற்றும் உதவித் திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர். 


அந்த மகஜர்கள் பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.


இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கந்தையா இங்கேஸ்வரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


வீட்டுத்திட்ட மிகுதி நிதி எங்கே – அராலி மத்தியில் மக்கள் போராட்டம் வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி இன்றையதினம் அராலி மத்தி பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்கப்பட்டது. குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமான போராட்டம் சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக நகர்ந்தது. அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் மற்றும் உதவித் திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர். அந்த மகஜர்கள் பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கந்தையா இங்கேஸ்வரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement