• Sep 21 2024

சஜித் அரசாங்கத்தில் யாருக்கு பிரதமர் பதவி? கட்சிக்குள் தீவிரமாகும் பேச்சுவார்த்தை

Chithra / Aug 7th 2024, 10:07 am
image

Advertisement

 

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்தால் பிரதமர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் தரப்பு வெற்றியீட்டினால், பிரதமர் பதவி ரஞ்சித் மத்துமபண்டாரவிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சித் மத்துமபண்டார கட்சியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவி குறித்து தற்பொழுது கட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சித் மத்தும பண்டாரவின் தேர்தல் தொகுதியான மொனராகல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்களும் இந்த விடயம் பற்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர், தான் பிரதமராகப் பதவியேற்கவிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில்  செய்திகள் பகிரப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சஜித் அரசாங்கத்தில் யாருக்கு பிரதமர் பதவி கட்சிக்குள் தீவிரமாகும் பேச்சுவார்த்தை  சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்தால் பிரதமர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் தரப்பு வெற்றியீட்டினால், பிரதமர் பதவி ரஞ்சித் மத்துமபண்டாரவிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.ரஞ்சித் மத்துமபண்டார கட்சியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் பதவி குறித்து தற்பொழுது கட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ரஞ்சித் மத்தும பண்டாரவின் தேர்தல் தொகுதியான மொனராகல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்களும் இந்த விடயம் பற்றி தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர், தான் பிரதமராகப் பதவியேற்கவிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில்  செய்திகள் பகிரப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement