• Nov 24 2024

தேர்தலில் யாருக்கு ஆதரவு..? ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார விளக்கம்

Chithra / Jan 19th 2024, 9:15 am
image

 


நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நிபுணத்துவம் மற்றும் அனுபவமுள்ள ஒருவரே தேவைப்படுகிறார் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பல கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக, ஏகமானதாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் ஒருவரே எமது கட்சியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார். 

அத்துடன் பொதுஜன பெரமுன மேற்கொள்ளும் தீர்மானம் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் நபர் தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும்  வேலைத்திட்டங்களை இல்லாமல் செய்து அதற்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க வேண்டும். 

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தினூடான உடன்படிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய  கொடுக்கல் வாங்கல் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். 

அவ்வாறு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் ஒருவராலும் இந்த நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல முடியாமல் போகும். 

எனவே நாட்டின்  எதிர்கால பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் பொருத்தமான தலைவர் ஒருவருக்கே தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்றார்.

தேர்தலில் யாருக்கு ஆதரவு. ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார விளக்கம்  நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நிபுணத்துவம் மற்றும் அனுபவமுள்ள ஒருவரே தேவைப்படுகிறார் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பல கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக, ஏகமானதாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் ஒருவரே எமது கட்சியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார். அத்துடன் பொதுஜன பெரமுன மேற்கொள்ளும் தீர்மானம் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் நபர் தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும்  வேலைத்திட்டங்களை இல்லாமல் செய்து அதற்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க வேண்டும். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தினூடான உடன்படிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய  கொடுக்கல் வாங்கல் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் ஒருவராலும் இந்த நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல முடியாமல் போகும். எனவே நாட்டின்  எதிர்கால பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் பொருத்தமான தலைவர் ஒருவருக்கே தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement