• Sep 17 2024

ஏன் ரணிலுக்கு ஆதரவு? அங்கஜன் இராமநாதன் அளித்த விளக்கம்..!

Sharmi / Aug 23rd 2024, 2:04 pm
image

Advertisement

கடந்த 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு மத்தியில், நாட்டிற்கு விடிவு இல்லையா என எல்லோரும் ஏங்கியிருந்த போது ஏனைய கட்சித்தலைவர்கள் ஓடி ஒழிந்த போது இந்நாட்டை பொறுப்பெடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அங்கஜன் இராமநாதன் இன்றையதினம்  உறுதியளித்தார்.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தாம் ஆதரவு வழங்கியமை தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கடந்த 02.08.2024 அன்று என்னை எனது அலுவலகத்தில் சந்திக்க விருப்பம் கொண்ட போது, தனியே நான் மட்டும் அவரை சந்திக்காமல் குறுகிய கால அழைப்பில் எமது மக்களையும் வரவழைத்து தமிழ் மக்களின் இறைமை, கடந்தகால இழப்புகள், மீள்குடியேற்றம், அபிவிருத்தி, காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வு, நிர்வாக சீர்திருத்தம், மற்றும் தேவைகளை முன்வைத்து அதற்கான முன்மொழிவுகளையும் கொடுத்திருந்தேன்.

அவற்றின் அடிப்படையில் இன்றையதினம் (23.08.2024) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து எனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளேன் என்பதை மக்களுக்கு அறியத்தருகிறேன்.

🟢ரணில் விக்கிரமசிங்க

உலகில் 66 தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க தேர்தல் முடிவுகளை கூட மக்கள் புரட்சியால் திருத்தி எழுதியுள்ளார்கள். 

அத்தகைய புரட்சி எங்கள் நாட்டிலும் 2022ம் ஆண்டு இடம்பெற்றது.

மோசமான அரசியல் கொள்கைகளால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. எரிபொருள், எரிவாயு, உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள், குழந்தைகளுக்கான பால்மா, விவசாய உரம் என அனைத்துக்கும் மாதக்கணக்காக வரிசையில் நின்றோம். மின்சார தடைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.

இந்த நாட்டுக்கு விடிவு இல்லையா என எல்லோரும் ஏங்கியிருந்த போது - ஏனைய கட்சித்தலைவர்கள் ஓடி ஒழிந்த போது இந்நாட்டை பொறுப்பெடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

மிகக்குறுகிய காலத்திலேயே அனைத்து வரிசைகளையும் இல்லாமலாக்கி மக்களுக்கும் நாட்டுக்கும் விடியலை நோக்கிய நம்பிக்கையை கொடுத்த சிறந்த தலைமைத்துவ ஆளுமையும், அரசியல் பார்வையும் கொண்டவர் ஜனாதிபதி ரணில்.

இலங்கை சர்வதேசத்தின் மிகமுக்கியமான ஆடுகளம். அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சர்வதேசத்தின் கவனத்தை எப்போதும் கொண்டுள்ள நாடு. இந்த பூகோள அரசியலை எங்களுக்கு சாதகமாக்கி நாட்டை வளர்த்தெடுக்கும் சர்வதேச ராஜதந்திர உறவுக்கேற்ற ஜனாதிபதி ரணில்.

ஏன் ரணிலுக்கு ஆதரவு?

🟢தமிழ் மக்களின் இறைமையை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் வலுப்படுத்தல் வேண்டும்.

🔴இலங்கை தமிழ்பேசும் மக்களுக்கான கௌரவமான தீர்வு வேண்டும்.

🟡பொருளாதாரத்துடன் சேர்ந்த கடல் கனிய வளங்களை உள்ளடக்கிய வர்த்தக வலையமைப்பை கட்டமைத்தல்.

🔵புதிய தொழிற்சட்டம் மூலமாக கடற்றொழிலாளர்களை பயிற்றுவித்து புதிய தொழில்நுட்பங்கள், ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கி கடற்றொழிலாளர்களின் வருமானங்களை அதிகரிக்கச் செய்தல்.

🟠வடக்கில் பெண்கள் தலைமைத்துவ தொழிற்பேட்டைகளை உருவாக்குதல்.

🟢விவசாயத்துறையில் நவீனமயமாக்கல் ஊடாக இளையோரை ஊக்குவித்தல்.

🔵தகவல் தொழில்நுட்ப ரீதியாக எமது இளைஞர் யுவதிகளுக்கான திறமைகளை ஏற்படுத்தி சர்வதேச தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்.

🔴எங்கள் மாவட்டத்தை கல்விக்கான கேந்திர மையமாக கட்டமைத்தல்.

🟡பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து விருத்தியையும் செய்து வர்த்தக தொழில் இணைப்பை உருவாக்குதல்.

🟠தீவுகளை மையப்படுத்திய சுற்றுலாத்துறை அபிவிருத்தியை துரிதப்படுத்தல்.

அன்புக்குரிய தமிழ் மக்களாகிய நாம்,

எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி எங்கள் தீர்மானம் மிக்க வாக்குகளை திடமான நம்பிக்கையோடு எரிவாயு சிலின்டர் சின்னத்துக்கு வாக்களித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச்செய்து இந்நாட்டில் எதிர்கால சந்ததிக்கு நல்வாழ்வை ஏற்படுத்துவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஏன் ரணிலுக்கு ஆதரவு அங்கஜன் இராமநாதன் அளித்த விளக்கம். கடந்த 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு மத்தியில், நாட்டிற்கு விடிவு இல்லையா என எல்லோரும் ஏங்கியிருந்த போது ஏனைய கட்சித்தலைவர்கள் ஓடி ஒழிந்த போது இந்நாட்டை பொறுப்பெடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அங்கஜன் இராமநாதன் இன்றையதினம்  உறுதியளித்தார்.இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தாம் ஆதரவு வழங்கியமை தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.குறித்த பதிவில்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கடந்த 02.08.2024 அன்று என்னை எனது அலுவலகத்தில் சந்திக்க விருப்பம் கொண்ட போது, தனியே நான் மட்டும் அவரை சந்திக்காமல் குறுகிய கால அழைப்பில் எமது மக்களையும் வரவழைத்து தமிழ் மக்களின் இறைமை, கடந்தகால இழப்புகள், மீள்குடியேற்றம், அபிவிருத்தி, காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வு, நிர்வாக சீர்திருத்தம், மற்றும் தேவைகளை முன்வைத்து அதற்கான முன்மொழிவுகளையும் கொடுத்திருந்தேன்.அவற்றின் அடிப்படையில் இன்றையதினம் (23.08.2024) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து எனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளேன் என்பதை மக்களுக்கு அறியத்தருகிறேன்.🟢ரணில் விக்கிரமசிங்கஉலகில் 66 தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க தேர்தல் முடிவுகளை கூட மக்கள் புரட்சியால் திருத்தி எழுதியுள்ளார்கள். அத்தகைய புரட்சி எங்கள் நாட்டிலும் 2022ம் ஆண்டு இடம்பெற்றது.மோசமான அரசியல் கொள்கைகளால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. எரிபொருள், எரிவாயு, உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள், குழந்தைகளுக்கான பால்மா, விவசாய உரம் என அனைத்துக்கும் மாதக்கணக்காக வரிசையில் நின்றோம். மின்சார தடைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.இந்த நாட்டுக்கு விடிவு இல்லையா என எல்லோரும் ஏங்கியிருந்த போது - ஏனைய கட்சித்தலைவர்கள் ஓடி ஒழிந்த போது இந்நாட்டை பொறுப்பெடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.மிகக்குறுகிய காலத்திலேயே அனைத்து வரிசைகளையும் இல்லாமலாக்கி மக்களுக்கும் நாட்டுக்கும் விடியலை நோக்கிய நம்பிக்கையை கொடுத்த சிறந்த தலைமைத்துவ ஆளுமையும், அரசியல் பார்வையும் கொண்டவர் ஜனாதிபதி ரணில்.இலங்கை சர்வதேசத்தின் மிகமுக்கியமான ஆடுகளம். அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சர்வதேசத்தின் கவனத்தை எப்போதும் கொண்டுள்ள நாடு. இந்த பூகோள அரசியலை எங்களுக்கு சாதகமாக்கி நாட்டை வளர்த்தெடுக்கும் சர்வதேச ராஜதந்திர உறவுக்கேற்ற ஜனாதிபதி ரணில்.ஏன் ரணிலுக்கு ஆதரவு🟢தமிழ் மக்களின் இறைமையை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் வலுப்படுத்தல் வேண்டும்.🔴இலங்கை தமிழ்பேசும் மக்களுக்கான கௌரவமான தீர்வு வேண்டும்.🟡பொருளாதாரத்துடன் சேர்ந்த கடல் கனிய வளங்களை உள்ளடக்கிய வர்த்தக வலையமைப்பை கட்டமைத்தல்.🔵புதிய தொழிற்சட்டம் மூலமாக கடற்றொழிலாளர்களை பயிற்றுவித்து புதிய தொழில்நுட்பங்கள், ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கி கடற்றொழிலாளர்களின் வருமானங்களை அதிகரிக்கச் செய்தல்.🟠வடக்கில் பெண்கள் தலைமைத்துவ தொழிற்பேட்டைகளை உருவாக்குதல்.🟢விவசாயத்துறையில் நவீனமயமாக்கல் ஊடாக இளையோரை ஊக்குவித்தல்.🔵தகவல் தொழில்நுட்ப ரீதியாக எமது இளைஞர் யுவதிகளுக்கான திறமைகளை ஏற்படுத்தி சர்வதேச தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்.🔴எங்கள் மாவட்டத்தை கல்விக்கான கேந்திர மையமாக கட்டமைத்தல்.🟡பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து விருத்தியையும் செய்து வர்த்தக தொழில் இணைப்பை உருவாக்குதல்.🟠தீவுகளை மையப்படுத்திய சுற்றுலாத்துறை அபிவிருத்தியை துரிதப்படுத்தல்.அன்புக்குரிய தமிழ் மக்களாகிய நாம்,எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி எங்கள் தீர்மானம் மிக்க வாக்குகளை திடமான நம்பிக்கையோடு எரிவாயு சிலின்டர் சின்னத்துக்கு வாக்களித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச்செய்து இந்நாட்டில் எதிர்கால சந்ததிக்கு நல்வாழ்வை ஏற்படுத்துவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement