• Jan 02 2025

வட்டவளை அணைக்கட்டினை அகலப்படுத்தினால் வயல் அழிவுகளை குறைக்கலாம்; கருணை ராஜன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Dec 20th 2024, 3:13 pm
image

இவ் ஆண்டு  ஏற்பட்ட பாரிய வெள்ளமானது வயல் நிலங்களையும் ஆற்று வண்டுகளையும் பெரிதாக பாதித்திருக்கின்றது.

ஒவ்வொரு வருடமும் இந்த வெள்ளத்திலே பாதிப்புற்றாலும் இந்த வருடம் அதிக மழை காரணமாக பாரிய உடைப்புகள் வயல் நிலங்களில் ஏற்பட்டிருக்கின்றது. 

நவகிரி குளத்திலிருந்து இரண்டு வான்கதவுகள் நான்கு அடி ஆழத்தில் திறக்கப்படும் போது அதிலிருந்து வெளியேறும் நீரின் இந்த அளவை வெளியேற்றக்கூடிய அளவிற்கு வெள்ளாவளி மண்டூர் பிரதான பாதை ஊடகச் செல்கின்ற அந்த அணைக்கட்டுகள் காணப்படுகின்றது.

ஒன்று வட்ட வளை அணைக்கட்டு அடுத்தது முகத்துவாரம் முடக்குமுடி ஊடாக வெளிவரும் நீரானது ஒன்று சேர்ந்து இவ்அணைக்கட்டு ஊடாக செல்லவதானால் அதிகளவான நீர் பேராற்றுக்கு செல்ல முடியாமல் இருப்பதனால் , வயல் நிலங்களையும் வயல்களை பாதித்துக் கொண்டு வெள்ள நீரானது செல்வதானால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.

வட்டவளை அணைக்கட்டினை அகலப்படுத்தினால் எதிர்காலத்தில் இந்த அணைக்கட்டு ஊடாக வெள்ள நீரை செலுத்துவது மூலம் பேராற்றுக்கு தமது வயல் அழிவுகளை குறைத்துக் கொள்ளலாம் எனவும் ஓட்டடிமுன்மாரி வயற்கண்டம் ஆதவன் கமலநல அமைப்பின் தலைவர் சந்திரசேகரம் கருணை ராஜன் கருத்து தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மண்டூர் வட்டவளை , ஓட்டடிமுன்மாரி போன்ற பல்வேறு வயல் கண்ட வயல் போக நிலங்கள் உடைப்புகள் எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த அணைக்கட்டுகளை அகலப்படுத்தப்படுவதனால் எதிர்காலத்தில் விவசாயிகள், இந்த பிரதேச மக்கள் அனைவரும் நன்மையடைவார்கள் எனவும் தெரிவித்தார்.



வட்டவளை அணைக்கட்டினை அகலப்படுத்தினால் வயல் அழிவுகளை குறைக்கலாம்; கருணை ராஜன் சுட்டிக்காட்டு. இவ் ஆண்டு  ஏற்பட்ட பாரிய வெள்ளமானது வயல் நிலங்களையும் ஆற்று வண்டுகளையும் பெரிதாக பாதித்திருக்கின்றது.ஒவ்வொரு வருடமும் இந்த வெள்ளத்திலே பாதிப்புற்றாலும் இந்த வருடம் அதிக மழை காரணமாக பாரிய உடைப்புகள் வயல் நிலங்களில் ஏற்பட்டிருக்கின்றது. நவகிரி குளத்திலிருந்து இரண்டு வான்கதவுகள் நான்கு அடி ஆழத்தில் திறக்கப்படும் போது அதிலிருந்து வெளியேறும் நீரின் இந்த அளவை வெளியேற்றக்கூடிய அளவிற்கு வெள்ளாவளி மண்டூர் பிரதான பாதை ஊடகச் செல்கின்ற அந்த அணைக்கட்டுகள் காணப்படுகின்றது.ஒன்று வட்ட வளை அணைக்கட்டு அடுத்தது முகத்துவாரம் முடக்குமுடி ஊடாக வெளிவரும் நீரானது ஒன்று சேர்ந்து இவ்அணைக்கட்டு ஊடாக செல்லவதானால் அதிகளவான நீர் பேராற்றுக்கு செல்ல முடியாமல் இருப்பதனால் , வயல் நிலங்களையும் வயல்களை பாதித்துக் கொண்டு வெள்ள நீரானது செல்வதானால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.வட்டவளை அணைக்கட்டினை அகலப்படுத்தினால் எதிர்காலத்தில் இந்த அணைக்கட்டு ஊடாக வெள்ள நீரை செலுத்துவது மூலம் பேராற்றுக்கு தமது வயல் அழிவுகளை குறைத்துக் கொள்ளலாம் எனவும் ஓட்டடிமுன்மாரி வயற்கண்டம் ஆதவன் கமலநல அமைப்பின் தலைவர் சந்திரசேகரம் கருணை ராஜன் கருத்து தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மண்டூர் வட்டவளை , ஓட்டடிமுன்மாரி போன்ற பல்வேறு வயல் கண்ட வயல் போக நிலங்கள் உடைப்புகள் எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த அணைக்கட்டுகளை அகலப்படுத்தப்படுவதனால் எதிர்காலத்தில் விவசாயிகள், இந்த பிரதேச மக்கள் அனைவரும் நன்மையடைவார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement