• Nov 22 2024

விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்..!

Sharmi / Oct 9th 2024, 1:28 pm
image

கந்தளாய் மினிபுர பிரதேசத்தின் சோமாவதி வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைக் கூட்டத்தால் பயிர்கள் மற்றும் பகுதியளவில் வீடொன்றும் திருகோணமலை-கந்தளாய் பிரதேசத்தில் சேதமாக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 4 மணியளவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஐந்து காட்டு யானைகள் தென்னை, மரவள்ளி போன்ற பல பயிர்களை நாசம் செய்துள்ளன.

மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த வீடொன்றையும் காட்டு யானைகளால் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

சோமாவதிக் காடு மற்றும் சூரியபுர கழிவு போடப்படும் இடங்களிலிருந்து  வரும் இந்த காட்டு யானைகள் தொடர்ந்து கிராமங்களை சுற்றி சுற்றித் திரிந்து பல விவசாய நிலங்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நீண்ட நாட்களாக மிகுந்த வேதனையுடன் கட்டிய வீடுகள், சொத்துக்கள், விளைநிலங்கள் யானைகளால் இரவோடு இரவாக நாசமாகி வருவதாகவும், காட்டு யானைகளின் தொல்லையை விரைவில் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 


விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம். கந்தளாய் மினிபுர பிரதேசத்தின் சோமாவதி வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைக் கூட்டத்தால் பயிர்கள் மற்றும் பகுதியளவில் வீடொன்றும் திருகோணமலை-கந்தளாய் பிரதேசத்தில் சேதமாக்கப்பட்டுள்ளன.இன்று அதிகாலை 4 மணியளவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஐந்து காட்டு யானைகள் தென்னை, மரவள்ளி போன்ற பல பயிர்களை நாசம் செய்துள்ளன.மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த வீடொன்றையும் காட்டு யானைகளால் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.சோமாவதிக் காடு மற்றும் சூரியபுர கழிவு போடப்படும் இடங்களிலிருந்து  வரும் இந்த காட்டு யானைகள் தொடர்ந்து கிராமங்களை சுற்றி சுற்றித் திரிந்து பல விவசாய நிலங்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.நீண்ட நாட்களாக மிகுந்த வேதனையுடன் கட்டிய வீடுகள், சொத்துக்கள், விளைநிலங்கள் யானைகளால் இரவோடு இரவாக நாசமாகி வருவதாகவும், காட்டு யானைகளின் தொல்லையை விரைவில் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement