• Jul 24 2026

தெற்கு ஐரோப்பாவை சூழும் காட்டுத்தீ பேரழிவு-ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

Ziya / Jul 24th 2026, 9:34 am
image

கடும் வெப்பம், நீடித்த வறட்சி மற்றும் பலத்த காற்று காரணமாக, தெற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


பிரான்சில் காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


ஸ்பெயினில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ள நிலையில், காட்டுத்தீ 32,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பை எரித்து சாம்பலாக்கியுள்ளது.


இதேவேளை, பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


தொடர்ந்து நிலவும் கடும் வெப்பம், வறண்ட தாவரங்கள் மற்றும் பலத்த காற்று ஆகியவை தீயை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் பரவச் செய்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


ஐரோப்பா முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிகரித்து வரும் வெப்ப அலைகளும் நீண்டகால வறட்சியும் காட்டுத்தீ அபாயத்தை மேலும் மோசமாக்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


தெற்கு ஐரோப்பாவில் பல நாடுகள் ஒரே நேரத்தில் வெப்பம், வறட்சி மற்றும் காட்டுத்தீ என மூன்று பேராபத்துகளையும் எதிர்கொண்டு வருகின்றன. வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரித்தால், நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என அச்சம் நிலவுகிறது.

தெற்கு ஐரோப்பாவை சூழும் காட்டுத்தீ பேரழிவு-ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் கடும் வெப்பம், நீடித்த வறட்சி மற்றும் பலத்த காற்று காரணமாக, தெற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பிரான்சில் காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.ஸ்பெயினில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ள நிலையில், காட்டுத்தீ 32,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பை எரித்து சாம்பலாக்கியுள்ளது.இதேவேளை, பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தொடர்ந்து நிலவும் கடும் வெப்பம், வறண்ட தாவரங்கள் மற்றும் பலத்த காற்று ஆகியவை தீயை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் பரவச் செய்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஐரோப்பா முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிகரித்து வரும் வெப்ப அலைகளும் நீண்டகால வறட்சியும் காட்டுத்தீ அபாயத்தை மேலும் மோசமாக்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.தெற்கு ஐரோப்பாவில் பல நாடுகள் ஒரே நேரத்தில் வெப்பம், வறட்சி மற்றும் காட்டுத்தீ என மூன்று பேராபத்துகளையும் எதிர்கொண்டு வருகின்றன. வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரித்தால், நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என அச்சம் நிலவுகிறது.

Advertisement

Advertisement

Advertisement