• Feb 06 2026

வீட்டு உரிமையாளர்களுக்குப் பாதிப்பா? புதிய சட்டமூலத்திற்கு எதிராக மனு!

Chithra / Feb 6th 2026, 9:57 am
image


அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள "குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்" ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இம்மனுவின் பிரதிவாதியாகச் சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 


வாடகைக்குக் குடியிருப்பவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், 

அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களினால் காணி உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


குறித்த சட்டமூலத்தின் 01 முதல் 14 வரையான சரத்துக்கள், அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் பிரிவுகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் மீறுவதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார். 


அதற்கமைய, குறித்த சர்ச்சைக்குரிய சரத்துக்களை நிறைவேற்ற வேண்டுமாயின், அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அனுமதி பெறப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீட்டு உரிமையாளர்களுக்குப் பாதிப்பா புதிய சட்டமூலத்திற்கு எதிராக மனு அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள "குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்" ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவின் பிரதிவாதியாகச் சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வாடகைக்குக் குடியிருப்பவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களினால் காணி உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தின் 01 முதல் 14 வரையான சரத்துக்கள், அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் பிரிவுகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் மீறுவதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார். அதற்கமைய, குறித்த சர்ச்சைக்குரிய சரத்துக்களை நிறைவேற்ற வேண்டுமாயின், அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அனுமதி பெறப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement