• May 20 2024

அரச வைத்தியசாலையில் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்..! வெளியான தகவல்

Chithra / Jan 11th 2024, 1:55 pm
image

Advertisement

 

பல சுகாதார நிபுணத்துவ சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் அன்றாடப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதன் காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியர்கள், தாதியர்களின் சேவைகள் மற்றும் மருந்து விநியோகம் என்பன வழமை போன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் கனிஷ்ட ஊழியர்கள் இரவுப் பணியை முடித்துக் கொண்டு வெளியேறியதாகவும், எஞ்சிய ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

எனினும், அவசர சிகிச்சைச் சேவைகள் தொடரும் எனவும், அனைத்து வைத்தியர்களும் 24 மணிநேர சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்க நடவடிக்கையை சீர்குலைக்கும் நோக்கில் அல்ல உயிரைக் காப்பாற்றுவதே கடமை எனத் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர், ஆபத்தான நோயாளர்களை வீட்டில் வைத்திருக்காமல் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறும் தெரிவித்தார்.

35,000 ரூபா கொடுப்பனவை கோரி சுகாதார சேவையின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச வைத்தியசாலையில் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர். வெளியான தகவல்  பல சுகாதார நிபுணத்துவ சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் அன்றாடப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.இதன் காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.வைத்தியர்கள், தாதியர்களின் சேவைகள் மற்றும் மருந்து விநியோகம் என்பன வழமை போன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மருத்துவமனையின் கனிஷ்ட ஊழியர்கள் இரவுப் பணியை முடித்துக் கொண்டு வெளியேறியதாகவும், எஞ்சிய ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.எனினும், அவசர சிகிச்சைச் சேவைகள் தொடரும் எனவும், அனைத்து வைத்தியர்களும் 24 மணிநேர சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.தமது தொழிற்சங்க நடவடிக்கையை சீர்குலைக்கும் நோக்கில் அல்ல உயிரைக் காப்பாற்றுவதே கடமை எனத் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர், ஆபத்தான நோயாளர்களை வீட்டில் வைத்திருக்காமல் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறும் தெரிவித்தார்.35,000 ரூபா கொடுப்பனவை கோரி சுகாதார சேவையின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement