• Apr 10 2025

இரத்து செய்யப்படும் புலமைப்பரிசில் பரீட்சை..? முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்..!

Chithra / Dec 5th 2023, 3:56 pm
image

 

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு எழுத முடியாத நிலையில் பிள்ளைகளுக்கு வினாத்தாள்கள் கிடைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ளது போன்று ஐந்தாண்டு புலமைப்பரிசில் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், 

தான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அதனை நிறைவேற்ற முயற்சித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்தார்.

ஐந்தாம் வருட புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரத்து செய்யப்படும் புலமைப்பரிசில் பரீட்சை. முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்.  ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு எழுத முடியாத நிலையில் பிள்ளைகளுக்கு வினாத்தாள்கள் கிடைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ளது போன்று ஐந்தாண்டு புலமைப்பரிசில் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், தான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அதனை நிறைவேற்ற முயற்சித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்தார்.ஐந்தாம் வருட புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now