நீர் கட்டணங்கள் தொடர்பான மீளாய்வுப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்தக் காலப்பகுதியில் நிலவும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, நீர் கட்டணங்களை அதிகரிப்பதா, குறைப்பதா அல்லது தற்போதைய கட்டண முறையை தொடர்வதா என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தின் குடிநீர்த் தேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு இந்த ஆண்டு சுமார் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்கீழ் புதிய நீர்க் குழாய்களைப் பதித்தல், பழைய குழாய் கட்டமைப்புகளை சீரமைத்தல் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்ட குடிநீர்த் திட்டங்கள் மற்றும் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, மக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நாட்டின் பிரதான நீர் மூலாதாரங்களுக்கு இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை எனவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணம் அதிகரிக்குமா குறைக்கப்படுமா ஜனவரியில் தீர்மானம் நீர் கட்டணங்கள் தொடர்பான மீளாய்வுப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அந்தக் காலப்பகுதியில் நிலவும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, நீர் கட்டணங்களை அதிகரிப்பதா, குறைப்பதா அல்லது தற்போதைய கட்டண முறையை தொடர்வதா என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கண்டி மாவட்டத்தின் குடிநீர்த் தேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.கண்டி மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு இந்த ஆண்டு சுமார் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன்கீழ் புதிய நீர்க் குழாய்களைப் பதித்தல், பழைய குழாய் கட்டமைப்புகளை சீரமைத்தல் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்ட குடிநீர்த் திட்டங்கள் மற்றும் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, மக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நாட்டின் பிரதான நீர் மூலாதாரங்களுக்கு இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை எனவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.