• Jan 18 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணியாக களமிறங்கவுள்ள விமல் அணி..!

Sharmi / Dec 12th 2024, 12:21 pm
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் தலைமையின்கீழ் தேசப்பற்று கூட்டணியொன்று ஸ்தாபிக்கவுள்ளதாக முன்னணியின் பிரதித் தலைவர் முன்னாள் எம்.பி ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி தலைமையிலான கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. விலைபோகாத தரப்புகளை உள்ளடக்கிய தேசியப்பற்றுள்ள கூட்டணியாக செயற்படுவோம்.

அதேவேளை மாகாணசபைத் தேர்தலிலும் போட்டியிடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணியாக களமிறங்கவுள்ள விமல் அணி. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் தலைமையின்கீழ் தேசப்பற்று கூட்டணியொன்று ஸ்தாபிக்கவுள்ளதாக முன்னணியின் பிரதித் தலைவர் முன்னாள் எம்.பி ஜயந்த சமரவீர தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி தலைமையிலான கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்நிலையில் அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. விலைபோகாத தரப்புகளை உள்ளடக்கிய தேசியப்பற்றுள்ள கூட்டணியாக செயற்படுவோம்.அதேவேளை மாகாணசபைத் தேர்தலிலும் போட்டியிடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement