• Aug 15 2026

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம் - பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்ட சிறீதரன் எம்.பி!

Chithra / Aug 14th 2026, 4:25 pm
image


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.


பூநகரி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டத்தை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தினால் பயன்தரும் நிலையிலுள்ள 5000-க்கும் அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்படுவதோடு, அதனை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்க்கைத் தரமும் முற்றுமுழுதாகப் பாதிக்கப்படும்.


கள விஜயத்தின் பின்னர், கிராஞ்சி ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன் போது, அடுத்து மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும், தொடர் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.


இதன்போது, பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் கண்ணதாசன், கட்சியின் செயற்பாட்டாளர் குபேந்திரன் ஆகியோருடன் ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம் - பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்ட சிறீதரன் எம்.பி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.பூநகரி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டத்தை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தினால் பயன்தரும் நிலையிலுள்ள 5000-க்கும் அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்படுவதோடு, அதனை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்க்கைத் தரமும் முற்றுமுழுதாகப் பாதிக்கப்படும்.கள விஜயத்தின் பின்னர், கிராஞ்சி ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன் போது, அடுத்து மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும், தொடர் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.இதன்போது, பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் கண்ணதாசன், கட்சியின் செயற்பாட்டாளர் குபேந்திரன் ஆகியோருடன் ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement