அமெரிக்காவில் வேகமாகப் பரவும் "குளிர்கால வாந்தி நோய்" எனும் நோரோவைரஸ் மிகவும் தொற்றக்கூடிய வைரஸாகும்.
இது குடல் அழற்சியை ஏற்படுத்தி வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு போன்ற அறிகுறிகளை உண்டாக்குகிறது.
இந்த நோய் குளிர்காலத்தில் அதிகமாக பரவுகின்ற காரணத்தினால் இது "குளிர்கால வாந்தி" என்று அழைக்கப்படுகிறது.
காதாரமற்ற உணவு, அசுத்தமான நீர் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடித் தொடர்பு மூலம் இந்த வைரஸ் எளிதில் பரவும் எனத் தொிவிக்கப்படுகின்றது.
விடுமுறை தினங்களின் நெருக்கம், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் ஆகியவற்றால் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாகப் பாடசாலைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் உணவகங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோரோவைரஸை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் குறைந்தது 20 விநாடிகளுக்குக் கைகளைக் கழுவுதல், சமைக்கப்படாத கடல் உணவுகள், அசுத்தமான நீர் போன்றவற்றைக் கவனமாகக் கையாளுதல், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கிருமி நாசினிகளைப் பயன்படுத்திச் சுத்தமாகப் பராமரித்தல் போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதன் மூலம் பரவுவதை தடுக்க முடியும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த தொற்று வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளதோடு,
குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வேகமாகப் பரவும் 'குளிர்கால வாந்தி நோய்' அமெரிக்காவில் வேகமாகப் பரவும் "குளிர்கால வாந்தி நோய்" எனும் நோரோவைரஸ் மிகவும் தொற்றக்கூடிய வைரஸாகும். இது குடல் அழற்சியை ஏற்படுத்தி வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு போன்ற அறிகுறிகளை உண்டாக்குகிறது.இந்த நோய் குளிர்காலத்தில் அதிகமாக பரவுகின்ற காரணத்தினால் இது "குளிர்கால வாந்தி" என்று அழைக்கப்படுகிறது.காதாரமற்ற உணவு, அசுத்தமான நீர் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடித் தொடர்பு மூலம் இந்த வைரஸ் எளிதில் பரவும் எனத் தொிவிக்கப்படுகின்றது.விடுமுறை தினங்களின் நெருக்கம், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் ஆகியவற்றால் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.குறிப்பாகப் பாடசாலைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் உணவகங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.நோரோவைரஸை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் குறைந்தது 20 விநாடிகளுக்குக் கைகளைக் கழுவுதல், சமைக்கப்படாத கடல் உணவுகள், அசுத்தமான நீர் போன்றவற்றைக் கவனமாகக் கையாளுதல், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கிருமி நாசினிகளைப் பயன்படுத்திச் சுத்தமாகப் பராமரித்தல் போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதன் மூலம் பரவுவதை தடுக்க முடியும்.மேலும், பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.அதேவேளை, இந்த தொற்று வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளதோடு, குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.