அநுராதபுரத்தில் நொச்சியாகம, அந்தரவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது.
அந்தரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கோழி கூடுகளை மூடுவதற்கு சென்றிருந்த போது கோழி கூடுகளை சுற்றி பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியை தவறுதலாக தொட்டதால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த பெண் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்சார கம்பியை தவறுதலாக தொட்ட பெண் பலி அநுராதபுரத்தில் நொச்சியாகம, அந்தரவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது.அந்தரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கோழி கூடுகளை மூடுவதற்கு சென்றிருந்த போது கோழி கூடுகளை சுற்றி பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியை தவறுதலாக தொட்டதால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார்.படுகாயமடைந்த பெண் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.