• Jan 05 2025

சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண் திடீர் மரணம்!

Chithra / Dec 29th 2024, 11:14 am
image


சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண் ஒருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இன்று மரணமடைந்தார்.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 11:30 மணியளவில் சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய வந்த இலக்கம் 53 கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த ஆர்.ஜி. ரேணுகா என்ற  56  வயதுடைய பெண், தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வேளையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலை எட்டு முப்பது மணியளவில் மரணித்துள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு மரணித்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனைகள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடைபெறவுது.

பரிசோதனைகள் முடிந்த பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண் திடீர் மரணம் சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண் ஒருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இன்று மரணமடைந்தார்.இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 11:30 மணியளவில் சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய வந்த இலக்கம் 53 கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த ஆர்.ஜி. ரேணுகா என்ற  56  வயதுடைய பெண், தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வேளையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலை எட்டு முப்பது மணியளவில் மரணித்துள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.இவ்வாறு மரணித்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனைகள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடைபெறவுது.பரிசோதனைகள் முடிந்த பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement