கல்முனையில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த பெண் அம்பாறை – நற்பட்டிமுனை பகுதியில் உள்ள உறவினரின் மரண வீட்டிற்கு தனது குடும்பத்தாருடன் சென்றிருந்த வேளையில், வீதியை கடக்க முற்பட்ட போதே, அப்பகுதியில் வேகமாகச் சென்ற சிறிய ரக வான் ஒன்று அவர் மீது மோதிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வானில் அகப்பட்ட அவர், மோதுண்ட இடத்தில் இருந்து சுமார் 72 மீற்றருக்கு அப்பால் வரை வண்டியின் சில்லில் அகப்பட்டு இலுத்துச் செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த பெண் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வானின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கல்முனையில் வாகன விபத்து: பெண் படுகாயம் கல்முனையில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.குறித்த பெண் அம்பாறை – நற்பட்டிமுனை பகுதியில் உள்ள உறவினரின் மரண வீட்டிற்கு தனது குடும்பத்தாருடன் சென்றிருந்த வேளையில், வீதியை கடக்க முற்பட்ட போதே, அப்பகுதியில் வேகமாகச் சென்ற சிறிய ரக வான் ஒன்று அவர் மீது மோதிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது வானில் அகப்பட்ட அவர், மோதுண்ட இடத்தில் இருந்து சுமார் 72 மீற்றருக்கு அப்பால் வரை வண்டியின் சில்லில் அகப்பட்டு இலுத்துச் செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ் விபத்தில் படுகாயமடைந்த பெண் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வானின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.