• Apr 28 2025

பதுளையில் கொழுந்து பறித்த பெண் மின்னல் தாக்கி பலி - மேலும் ஜவர் வைத்தியசாலையில்

Thansita / Apr 28th 2025, 6:46 pm
image

பதுளை, எட்டம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிங்ரோஸ் நெலுவ தோட்டத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். 

அதே பகுதியில் வசித்து வந்த 47 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

இன்று மாலை பெய்த பலத்த மழையின் போது குறித் பெண் உள்ளிட்ட தரப்பினர் மழையிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்காக கொழுந்து நிறுக்கும் பகுதிக்குச் சென்றிருந்த போதே இந்த மின்னல் தாக்கம் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மேலும் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பதுளையில் கொழுந்து பறித்த பெண் மின்னல் தாக்கி பலி - மேலும் ஜவர் வைத்தியசாலையில் பதுளை, எட்டம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிங்ரோஸ் நெலுவ தோட்டத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வந்த 47 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இன்று மாலை பெய்த பலத்த மழையின் போது குறித் பெண் உள்ளிட்ட தரப்பினர் மழையிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்காக கொழுந்து நிறுக்கும் பகுதிக்குச் சென்றிருந்த போதே இந்த மின்னல் தாக்கம் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மேலும் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement