• Nov 24 2024

மனநலம் பாதிக்கப்பட்ட கணவனை கோடரியால் தாக்கி கொலைசெய்த மனைவி! இலங்கையில் நடந்த கொடூரம்

Chithra / May 31st 2024, 8:10 am
image


மனநலம் பாதிக்கப்பட்ட கணவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

இபலோகம காந்திரியகம பிரதேசத்தில் வசித்து வந்த புஞ்சி பண்டகே உக்கு பண்டா என்ற 74 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்தவரின் மனைவியான மேற்படி முகவரியில் வசிக்கும் 59 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி மீண்டும் குணமடையாத காரணத்தினால் கெக்கிராவ வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் பிற்பகல் தனது மகளின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இப்பலோகம பொலிஸ் நிலையக் கட்டளைத் தளபதி எச்.ஏ.யு.எஸ்.ஹப்புஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட கணவனை கோடரியால் தாக்கி கொலைசெய்த மனைவி இலங்கையில் நடந்த கொடூரம் மனநலம் பாதிக்கப்பட்ட கணவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.இபலோகம காந்திரியகம பிரதேசத்தில் வசித்து வந்த புஞ்சி பண்டகே உக்கு பண்டா என்ற 74 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்தவரின் மனைவியான மேற்படி முகவரியில் வசிக்கும் 59 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடந்த 24ஆம் திகதி மீண்டும் குணமடையாத காரணத்தினால் கெக்கிராவ வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் பிற்பகல் தனது மகளின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இப்பலோகம பொலிஸ் நிலையக் கட்டளைத் தளபதி எச்.ஏ.யு.எஸ்.ஹப்புஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement