சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமமம் பிரதேச செயலகத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு இன்று (18) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த மகளிர் தின நிகழ்வில் உள்ளூர் பெண் தொழில் முயற்சியாண்மையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இம் முறை குறித்த நிகழ்வுக்கான தேசிய தொனிப் பொருளாக " நிலையான எதிர்காலத்திற்கு அவள் ஒரு வலுவான வழிகாட்டியாக இருப்பாள்" எனும் தொனிப்பொருள் விளங்குகிறது.
சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 08 இனை முன்னிட்டு இவ் பிரதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் இயங்கி வரும் மகளிர் சங்க உறுப்பினர்களின் கலை ,கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன. குறித்த நிகழ்வுக்கு பெண்களுக்கான சுதந்திர அமைப்பான ஈவின்ங்ஸ் மற்றும் சமுர்த்தி பிரிவு அனுசரனை வழங்கியிருந்தது .
குறித்த நிகழ்வுகளை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாமினி , பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் நஸ்ரின் டிலானி ஆகியோர்கள் இணைந்து நெறிப்படுத்தியிருந்தனர்.
இவ் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,நிருவாக உத்தியோகத்தர் பி.யு.பி.எல்.உடகெதர ,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், EWings நிறுவனத்தின் தலைவி திருமதி காயத்திரி நளினகாந்தன், தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , இலங்கை வங்கி முகாமையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தம்பலகாமத்தில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமமம் பிரதேச செயலகத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு இன்று (18) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த மகளிர் தின நிகழ்வில் உள்ளூர் பெண் தொழில் முயற்சியாண்மையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இம் முறை குறித்த நிகழ்வுக்கான தேசிய தொனிப் பொருளாக " நிலையான எதிர்காலத்திற்கு அவள் ஒரு வலுவான வழிகாட்டியாக இருப்பாள்" எனும் தொனிப்பொருள் விளங்குகிறது.சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 08 இனை முன்னிட்டு இவ் பிரதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் இயங்கி வரும் மகளிர் சங்க உறுப்பினர்களின் கலை ,கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன. குறித்த நிகழ்வுக்கு பெண்களுக்கான சுதந்திர அமைப்பான ஈவின்ங்ஸ் மற்றும் சமுர்த்தி பிரிவு அனுசரனை வழங்கியிருந்தது .குறித்த நிகழ்வுகளை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாமினி , பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் நஸ்ரின் டிலானி ஆகியோர்கள் இணைந்து நெறிப்படுத்தியிருந்தனர்.இவ் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,நிருவாக உத்தியோகத்தர் பி.யு.பி.எல்.உடகெதர ,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், EWings நிறுவனத்தின் தலைவி திருமதி காயத்திரி நளினகாந்தன், தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , இலங்கை வங்கி முகாமையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.