• Nov 07 2025

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதல்!

shanuja / Oct 9th 2025, 11:58 am
image


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில், இன்று நடைபெறும் 10வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 


ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி இன்று மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது. 


மகளிர் உலகக்கோப்பை தொடரில், இதுவரை தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.


 

தொடர்ந்து, தொடரில் சிறப்பான ஆதிக்கத்தைச் செயல்படுத்தி வரும் இந்திய அணி, இன்றையப் போட்டியிலும் தனது வெற்றிப் பயணத்தைத் தொடரவும் ஆதிக்கத்தைத் தக்கவைக்கவும் முயற்சிக்கும். 


அணியின் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவால், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. 


அதேசமயம், பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரேனுகா சிங், தீப்தி சர்மா, ஸ்நே ரானா, கிரந்தி கவுட், ஸ்ரீ சாரணி ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் இந்திய மகளிர் அணி ஹாட்ரிக் வெற்றியை நிச்சயம் பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதல் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெறும் 10வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி இன்று மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது. மகளிர் உலகக்கோப்பை தொடரில், இதுவரை தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. தொடர்ந்து, தொடரில் சிறப்பான ஆதிக்கத்தைச் செயல்படுத்தி வரும் இந்திய அணி, இன்றையப் போட்டியிலும் தனது வெற்றிப் பயணத்தைத் தொடரவும் ஆதிக்கத்தைத் தக்கவைக்கவும் முயற்சிக்கும். அணியின் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவால், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரேனுகா சிங், தீப்தி சர்மா, ஸ்நே ரானா, கிரந்தி கவுட், ஸ்ரீ சாரணி ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் இந்திய மகளிர் அணி ஹாட்ரிக் வெற்றியை நிச்சயம் பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement