• Mar 15 2026

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது பற்றி அரச நிறைவேற்று அதிகாரிகளுக்குச் செயலமர்வு!

shanu / Mar 14th 2026, 8:09 pm
image

அரச சேவையை மிகவும் பயனுள்ள மற்றும் செயற்திறன் மிக்கதாக மாற்றுவதற்காக, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த விசேட விழிப்புணர்வு செயலமர்வு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


‘அரச சேவையை மாற்றியமைப்பதற்கான செயற்கை நுண்ணறிவு’ எனும் தலைப்பின் கீழ் இந்தச் செயலமர்வு இடம்பெற்றது.


ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலில், இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் சப்ரகமுவ மாகாண சபையினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசின் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக, அதிகாரிகளைப் புதிய தொழில்நுட்பத்துக்குத் தயார்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களும், ஜனாதிபதி அலுவலகத்தின் டிஜிட்டல் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் வளவாளர்களுமான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமிச அபேசிங்க ஆகியோர் இதில் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விரிவுரைகளை வழங்கினர்.


இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனீதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிறைவேற்றுத் தர அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது பற்றி அரச நிறைவேற்று அதிகாரிகளுக்குச் செயலமர்வு அரச சேவையை மிகவும் பயனுள்ள மற்றும் செயற்திறன் மிக்கதாக மாற்றுவதற்காக, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த விசேட விழிப்புணர்வு செயலமர்வு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.‘அரச சேவையை மாற்றியமைப்பதற்கான செயற்கை நுண்ணறிவு’ எனும் தலைப்பின் கீழ் இந்தச் செயலமர்வு இடம்பெற்றது.ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலில், இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் சப்ரகமுவ மாகாண சபையினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசின் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக, அதிகாரிகளைப் புதிய தொழில்நுட்பத்துக்குத் தயார்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களும், ஜனாதிபதி அலுவலகத்தின் டிஜிட்டல் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் வளவாளர்களுமான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமிச அபேசிங்க ஆகியோர் இதில் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விரிவுரைகளை வழங்கினர்.இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனீதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிறைவேற்றுத் தர அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement