• Jan 28 2026

டிஜிட்டல் உரிமைகளை வலுப்படுத்தல் தொடர்பிலான செயலமர்வு!

shanuja / Jan 26th 2026, 5:56 pm
image

டிஜிட்டல் உரிமைகளை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (26)இடம் பெற்றது.


திருகோணமலை மாவட்ட தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்காக குறித்த நிகழ்வு இடம் பெற்றது. இதனை ஊடக சட்ட மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. டிஜிட்டல் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும் 


பாதுகாப்பான இணையவழி  நடைமுறைகளை ஊக்குவிக்கவும், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கிடையிலான பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட பயிற்சியாக எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த பயிற்சி நிகழ்வு, டிஜிட்டல் தளங்களில் செயல்படும் ஊடகப் பணியாளர்களுக்கு ஆதரவாக அமைக்கப்பட்டு, அவர்களது உரிமைகள் மற்றும் பொறுப்புகளை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுவதாகும்.


இந்த நிகழ்ச்சி, தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதோடு, பொறுப்புணர்வுடனும், பாதுகாப்புடனும், உரிமைகளை மதிக்கும் டிஜிட்டல் பத்திரிகைத் துறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இதில் வளவாளராக சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் கலந்து சிறப்பித்தார்.

இதில் பிரதேச ஊடகவியலாளர்கள்,சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் உரிமைகளை வலுப்படுத்தல் தொடர்பிலான செயலமர்வு டிஜிட்டல் உரிமைகளை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (26)இடம் பெற்றது.திருகோணமலை மாவட்ட தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்காக குறித்த நிகழ்வு இடம் பெற்றது. இதனை ஊடக சட்ட மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. டிஜிட்டல் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும் பாதுகாப்பான இணையவழி  நடைமுறைகளை ஊக்குவிக்கவும், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கிடையிலான பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட பயிற்சியாக எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பயிற்சி நிகழ்வு, டிஜிட்டல் தளங்களில் செயல்படும் ஊடகப் பணியாளர்களுக்கு ஆதரவாக அமைக்கப்பட்டு, அவர்களது உரிமைகள் மற்றும் பொறுப்புகளை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுவதாகும்.இந்த நிகழ்ச்சி, தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதோடு, பொறுப்புணர்வுடனும், பாதுகாப்புடனும், உரிமைகளை மதிக்கும் டிஜிட்டல் பத்திரிகைத் துறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இதில் வளவாளராக சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் கலந்து சிறப்பித்தார்.இதில் பிரதேச ஊடகவியலாளர்கள்,சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement