உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(30) காலை 9 மணிக்கு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் தலைமையில் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
"பயனுறுதி மிக்க நிலப் பயன்பாட்டின் ஊடக நலம் நிறைந்த நாடு" எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது உலக சுற்றாடல் தினம் மற்றும், தொனிப்பொருள் தொடர்பான விளக்கக்காட்சி மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர் எஸ்.சுபாசினி நிகழ்த்தினார்.
காடுகளை பேணுவதன் மூலம் நிலவள முகாமைத்துவம் தொடர்பில் வன வளத்திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர் எம்.எ ஹகீம் நிகழ்த்தினார்.
தொடர்ந்து Chrysalis organization நிறுவனத்தின் விளக்கக் காட்சி காண்பிக்கப்பட்டது.
நிலவளக் குறைதலுக்குரிய காரணங்களும் தடுப்பு நடவடிக்கை சாத்தியங்களும், தொழினுட்ப உத்திகளும் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கிளையின் உதவிப்பணிப்பாளர் எம்.உமையாள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில், வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் மகேஷ் ஜல்தோட்ட, மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி. ஸ்ரீபாஸ்கரன், Chrysalis நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கிளையின் உதவிப்பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலாக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு கருத்தரங்கு. உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(30) காலை 9 மணிக்கு நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் தலைமையில் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது."பயனுறுதி மிக்க நிலப் பயன்பாட்டின் ஊடக நலம் நிறைந்த நாடு" எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இதன் போது உலக சுற்றாடல் தினம் மற்றும், தொனிப்பொருள் தொடர்பான விளக்கக்காட்சி மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர் எஸ்.சுபாசினி நிகழ்த்தினார். காடுகளை பேணுவதன் மூலம் நிலவள முகாமைத்துவம் தொடர்பில் வன வளத்திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர் எம்.எ ஹகீம் நிகழ்த்தினார். தொடர்ந்து Chrysalis organization நிறுவனத்தின் விளக்கக் காட்சி காண்பிக்கப்பட்டது. நிலவளக் குறைதலுக்குரிய காரணங்களும் தடுப்பு நடவடிக்கை சாத்தியங்களும், தொழினுட்ப உத்திகளும் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கிளையின் உதவிப்பணிப்பாளர் எம்.உமையாள் நிகழ்த்தினார்.இந்நிகழ்வில், வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் மகேஷ் ஜல்தோட்ட, மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி. ஸ்ரீபாஸ்கரன், Chrysalis நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கிளையின் உதவிப்பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலாக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.