ஏமனில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் உள்ள ஏமனின் அல்-மக்கா துறைமுகம் மீது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஹூதிகள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் சவூதி அரேபியாவின் ஆயுதக் கிடங்குகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஏமன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலின் பின்னணி மற்றும் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஹூதிகளின் புதிய தாக்குதல்கள் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளன.
ஏமன் – சவூதி எல்லைப் பதற்றம் மீண்டும் தீவிரம் ஏமனில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் உள்ள ஏமனின் அல்-மக்கா துறைமுகம் மீது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது.ஹூதிகள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் சவூதி அரேபியாவின் ஆயுதக் கிடங்குகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஏமன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலின் பின்னணி மற்றும் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஹூதிகளின் புதிய தாக்குதல்கள் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளன.