• May 26 2026

தமிழர்களுக்கு எதிராக நடந்துகொண்டு சுதந்திரதினத்திற்கு அழைப்பு தருகிறீர்கள் - சபையில் சாணக்கியன்!

shanu / Feb 4th 2026, 10:49 am
image

சுதந்திர தினம் கொண்டாட எமக்கு  அழைப்பிதழ் தருகிறீர்கள். ஆனால் தமிழ்மக்களுக்கு 

எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

சுதந்திரம் என்ற பெயரில்  பல நிகழ்வுகள் ஏற்பாடு . தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்காது 

சுதந்திரதினம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. 


பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாள். தமிழருக்கு சுதந்திரமில்லை . வடக்கு -கிழக்கில் பாரிய பேரணி முன்னெடுக்க திட்டமிட்டுள்ளளோம். 


இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நீங்களே சுதந்திரத்தை கொண்டாடுங்கள்.  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும்  தமிழர்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. இன்றுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் தமிழர்களை சித்திரைவதை செய்துள்ளது.


ஆட்சிக்கு வந்து இவ்வளவு காலத்திலும் அரசியல் கைதிகள் யார் என்று கேக்கும் நிலை.சுதந்திரம் கிடைத்த தினத்திலிருந்து எமது  மண்ணைப் பாதுகாப்பது தான்  வேலை. 


பெரும்பான்மையினருக்கு விவசாயம்  செய்ய  கிவில் ஓயாத்திட்டம் . தமிழ் விவசாயிகள் அழிந்து போகலாம்.


வவுனியாவில் குளங்களைப் புனரமைக்க வன இலாகா அனுமதி வழங்க மறுத்துள்ளது. வெலிஓயாவில் உள்ள பெரும்பான்மையினருக்கு நீர்வழங்க 13000 ஏக்கர் காடுகளை அழிக்க தயார் - இது தான் சமத்துவமா? 


சுதந்திர தினம் கொண்டாட எமக்கு அழைப்பிதழ் தருகிறீர்கள். ஆனால் தமிழ்மக்களுக்கு 

எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது எனத் தெரிவித்தார். 

தமிழர்களுக்கு எதிராக நடந்துகொண்டு சுதந்திரதினத்திற்கு அழைப்பு தருகிறீர்கள் - சபையில் சாணக்கியன் சுதந்திர தினம் கொண்டாட எமக்கு  அழைப்பிதழ் தருகிறீர்கள். ஆனால் தமிழ்மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரம் என்ற பெயரில்  பல நிகழ்வுகள் ஏற்பாடு . தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்காது சுதந்திரதினம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாள். தமிழருக்கு சுதந்திரமில்லை . வடக்கு -கிழக்கில் பாரிய பேரணி முன்னெடுக்க திட்டமிட்டுள்ளளோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நீங்களே சுதந்திரத்தை கொண்டாடுங்கள்.  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும்  தமிழர்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. இன்றுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் தமிழர்களை சித்திரைவதை செய்துள்ளது.ஆட்சிக்கு வந்து இவ்வளவு காலத்திலும் அரசியல் கைதிகள் யார் என்று கேக்கும் நிலை.சுதந்திரம் கிடைத்த தினத்திலிருந்து எமது  மண்ணைப் பாதுகாப்பது தான்  வேலை. பெரும்பான்மையினருக்கு விவசாயம்  செய்ய  கிவில் ஓயாத்திட்டம் . தமிழ் விவசாயிகள் அழிந்து போகலாம்.வவுனியாவில் குளங்களைப் புனரமைக்க வன இலாகா அனுமதி வழங்க மறுத்துள்ளது. வெலிஓயாவில் உள்ள பெரும்பான்மையினருக்கு நீர்வழங்க 13000 ஏக்கர் காடுகளை அழிக்க தயார் - இது தான் சமத்துவமா சுதந்திர தினம் கொண்டாட எமக்கு அழைப்பிதழ் தருகிறீர்கள். ஆனால் தமிழ்மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement