திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட.
கிண்ணியா சோலை வெட்டுவான் ,மயிலடைப்பஞ்சேனை மக்களுக்கு உலர் உணர்வுப் பொருட்களை இன்று (15) வழங்கி வைத்தார்.
சுமார் 86 உலர் உணவுப் பொதிகளை இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்தார்.இதில் கிண்ணியா நகர சபையின் முன்னால் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது .
இப்பகுதியில் கடத்தொழில் விவசாயம் வீட்டுத் தோட்டங்களை நம்பி வாழ்வாதாரத்தை மக்கள் ஈட்டிக் கொண்டிருப்பவர்கள்
இந்த அரசாங்கம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களில் மாற்றங்களை கொண்டு வருவார்கள் என தெரிவு செய்த போதிலும் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களை கூட கவனிக்கவில்லை எனவே தான் அரசாங்கத்திடம் கோரிக்கையாக முன்வைப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் நஷ்ட ஈடுகளை வழங்கவும்.
இந்த அராங்கம் பல மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் என்று நினைத்து வாக்களித்தார்கள்.
மக்களுக்கு வெறும் ஏமாற்றம் மாத்திரமே எஞ்சியுள்ளது.
தேர்தல் காலங்களில் புதியவர்களை திறமையானவர்களை படித்தவர்களை தெரிவு செய்வோம் என கூறிய போதிலும் தற்போதைய சபாநாயகர் பதிவி கலாநிதி பட்டம் தொடர்பில் அவர்களே நம்பிக்கையிழந்து மக்களை ஏமாற்றியுள்ளார்கள் இன்னும் எதை எதையெல்லாம் சொல்லி ஏமாற்றப்போகிறார்களோ இதனால் மக்கள் அதிர்ப்திக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இந்த வெள்ள அனர்த்தத்தில் மக்களுக்கு இந்த அரசாங்கம் உதவும் என்று எதிர்பார்த்த போதும் அது நடைபெறவில்லை.
இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்களுக்கு ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நிவாரணங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும்
இந்த அரசாங்கத்தின் எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
சபாநாயகர் பதவியில் ஏற்பட்டுள்ள அந்தப் பிரச்சினை இன்று பெரும் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது
குறிப்பாக சபாநாயகர் உடைய தகைமை சம்பந்தமான செயற்பாடுகள் இன்று அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் பெயர்களை நீக்குகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் இந்த அரசாங்கம் படித்தவர்கள் வரவேண்டும் பட்டம் பெற்றவர்கள் வரவேண்டும் புதியவர்கள் வரவேண்டும் என்றெல்லாம் கூறினார்கள்
சென்ற அமைச்சரவை வழங்குகின்ற போது முஸ்லிம்களுக்கு தகுதி இல்லை என்று பேசினார்கள் அதனால் வழங்கப்படவில்லை என்று கூறினார்கள் இன்று மக்கள் மத்தியில் என்ன சொல்லப் போகின்றார்கள்
சபாநாயகர் பதவி என்பது கலாநிதி பட்டம் எடுத்தவர்களுக்கு வழங்குவதில்லை.
இன்னும் என்னென்ன விடயங்களில் இவர்கள் மக்களை ஏமாற்றி உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். எனக் கூறினார்.
உங்களுடைய வேலை திட்டம் எல்லாம் துரிதப்படுத்தபட வேண்டும் 24 மணித்தியாலயங்களுக்குள்ளே மாற்றத்தை கொண்டு வருவேன் என்று சொன்னவர்கள் இன்று (15) ஒன்றரை மாதங்கள் கழிந்தும் அவ்வாறு ஒன்றும் நடைபெறவில்லை உங்கள் செயற்பாடுகளை துரிதப்படுத்துங்கள் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
தகுதி இல்லை என அமைச்சரவை நியமனத்தில் முஸ்லிம்களை புறக்கணித்த நீங்கள் : தற்போது கலாநிதி தொடர்பில் என்ன சொல்ல போகின்றீர்கள் - இம்ரான் திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட. கிண்ணியா சோலை வெட்டுவான் ,மயிலடைப்பஞ்சேனை மக்களுக்கு உலர் உணர்வுப் பொருட்களை இன்று (15) வழங்கி வைத்தார்.சுமார் 86 உலர் உணவுப் பொதிகளை இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்தார்.இதில் கிண்ணியா நகர சபையின் முன்னால் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது .இப்பகுதியில் கடத்தொழில் விவசாயம் வீட்டுத் தோட்டங்களை நம்பி வாழ்வாதாரத்தை மக்கள் ஈட்டிக் கொண்டிருப்பவர்கள் இந்த அரசாங்கம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களில் மாற்றங்களை கொண்டு வருவார்கள் என தெரிவு செய்த போதிலும் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களை கூட கவனிக்கவில்லை எனவே தான் அரசாங்கத்திடம் கோரிக்கையாக முன்வைப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் நஷ்ட ஈடுகளை வழங்கவும். இந்த அராங்கம் பல மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் என்று நினைத்து வாக்களித்தார்கள். மக்களுக்கு வெறும் ஏமாற்றம் மாத்திரமே எஞ்சியுள்ளது.தேர்தல் காலங்களில் புதியவர்களை திறமையானவர்களை படித்தவர்களை தெரிவு செய்வோம் என கூறிய போதிலும் தற்போதைய சபாநாயகர் பதிவி கலாநிதி பட்டம் தொடர்பில் அவர்களே நம்பிக்கையிழந்து மக்களை ஏமாற்றியுள்ளார்கள் இன்னும் எதை எதையெல்லாம் சொல்லி ஏமாற்றப்போகிறார்களோ இதனால் மக்கள் அதிர்ப்திக்கு உள்ளாகியுள்ளார்கள்.இந்த வெள்ள அனர்த்தத்தில் மக்களுக்கு இந்த அரசாங்கம் உதவும் என்று எதிர்பார்த்த போதும் அது நடைபெறவில்லை. இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்களுக்கு ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளது.நிவாரணங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும்இந்த அரசாங்கத்தின் எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.சபாநாயகர் பதவியில் ஏற்பட்டுள்ள அந்தப் பிரச்சினை இன்று பெரும் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பாக சபாநாயகர் உடைய தகைமை சம்பந்தமான செயற்பாடுகள் இன்று அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் பெயர்களை நீக்குகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் இந்த அரசாங்கம் படித்தவர்கள் வரவேண்டும் பட்டம் பெற்றவர்கள் வரவேண்டும் புதியவர்கள் வரவேண்டும் என்றெல்லாம் கூறினார்கள்சென்ற அமைச்சரவை வழங்குகின்ற போது முஸ்லிம்களுக்கு தகுதி இல்லை என்று பேசினார்கள் அதனால் வழங்கப்படவில்லை என்று கூறினார்கள் இன்று மக்கள் மத்தியில் என்ன சொல்லப் போகின்றார்கள் சபாநாயகர் பதவி என்பது கலாநிதி பட்டம் எடுத்தவர்களுக்கு வழங்குவதில்லை.இன்னும் என்னென்ன விடயங்களில் இவர்கள் மக்களை ஏமாற்றி உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். எனக் கூறினார். உங்களுடைய வேலை திட்டம் எல்லாம் துரிதப்படுத்தபட வேண்டும் 24 மணித்தியாலயங்களுக்குள்ளே மாற்றத்தை கொண்டு வருவேன் என்று சொன்னவர்கள் இன்று (15) ஒன்றரை மாதங்கள் கழிந்தும் அவ்வாறு ஒன்றும் நடைபெறவில்லை உங்கள் செயற்பாடுகளை துரிதப்படுத்துங்கள் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.