• Jan 25 2025

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை; சிக்கிய மைத்துனர்!

Chithra / Jan 24th 2025, 9:17 am
image


வவுனியா - சுந்தரபுரத்தில் நேற்று இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தீபாவளி தினத்தன்று, தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு  காயப்படுத்திய  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு 11:30 மணியளவில் இவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவரது மைத்துநர் ஈச்சங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை; சிக்கிய மைத்துனர் வவுனியா - சுந்தரபுரத்தில் நேற்று இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த தீபாவளி தினத்தன்று, தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு  காயப்படுத்திய  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு 11:30 மணியளவில் இவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் இவரது மைத்துநர் ஈச்சங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement