• Apr 20 2025

முல்லைத்தீவில் T- 56 துப்பாக்கி ரவையுடன் கைதான இளைஞன்..!samugammedia

Tharun / Jan 25th 2024, 3:53 pm
image

முல்லைத்தீவு உடுப்புக்குளம்  பகுதியில் உள்ள தனியார் வீட்டு  காணி ஒன்றில் இருந்து நேற்று T- 56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளது 

முல்லைத்தீவு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு  காணியில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக நேற்று (24) மாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சோதனையின் போது  சந்தேக நபரின் வீட்டு காணியிலிருந்து T-56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன்,  33 வயது மதிக்கதக்க சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் T- 56 துப்பாக்கி ரவையுடன் கைதான இளைஞன்.samugammedia முல்லைத்தீவு உடுப்புக்குளம்  பகுதியில் உள்ள தனியார் வீட்டு  காணி ஒன்றில் இருந்து நேற்று T- 56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு  காணியில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக நேற்று (24) மாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.குறித்த சோதனையின் போது  சந்தேக நபரின் வீட்டு காணியிலிருந்து T-56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன்,  33 வயது மதிக்கதக்க சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement