வீதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் ஒருவர் நேற்று மாலை நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு இளைஞர்கள் ஏனைய வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தும் வீடியோ அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய, குறித்த மோட்டார் சைக்கிள் ஆனைமடு நோக்கி செலுத்தப்பட்டமை தெரியவந்தது.
அதன்படி, நேற்று மாலை நவகத்தேகம பொலிஸாரால் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்றைய தினம் (09) ஆனைமடு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞன்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை வீதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் ஒருவர் நேற்று மாலை நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இரண்டு இளைஞர்கள் ஏனைய வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தும் வீடியோ அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.அதற்கமைய, குறித்த மோட்டார் சைக்கிள் ஆனைமடு நோக்கி செலுத்தப்பட்டமை தெரியவந்தது. அதன்படி, நேற்று மாலை நவகத்தேகம பொலிஸாரால் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்றைய தினம் (09) ஆனைமடு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.