பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையைக் கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தனது மோட்டார்சைக்கிளைக் காப்பாற்ற முயன்ற போது ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (12) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையைக் கடக்க முயன்ற வேளையிலேயே ரயில் மோதி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவை வழியே வந்துள்ளார்.
அப்போது புகையிரதக் கடவை மூடப்பட்டிருந்தும், அவர் சற்றும் யோசிக்காமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தது. இதனால் அவரும் கீழே விழுந்தார்.
அப்போது வேகமாக ரயில் வந்துகொண்டிருந்த நிலையில் ரயில் அருகில் வருவதற்குள் தனது மோட்டார்சைக்கிளை தூக்க முயற்சித்துள்ளார்.
எனினும் ரயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், மோட்டார்சைக்கிளை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார். ஆனாலும் ஒரு நொடிப்பொழுதில் இளைஞரை ரயில் மோதித்தள்ளியது.
வேகமாக வந்த ரயிலில் சிக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் காட்சி ரயில்வே பகுதியிலிருந்த சிசிரிவி காணொளியில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்தக் காணொளியில் இளைஞர் ரயிலில் சிக்கிய காட்சி பதறவைத்துள்ளது.
இவ்வாறான ரயில் விபத்துக்கள் இலங்கையில் தற்போது பரவலாக அதிகரித்து வருகின்றது. எனவே இதுபோன்ற விபத்துக்களில் சிக்காமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.
பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற இளைஞர்; நொடியில் பறிபோன உயிர் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையைக் கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தனது மோட்டார்சைக்கிளைக் காப்பாற்ற முயன்ற போது ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (12) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையைக் கடக்க முயன்ற வேளையிலேயே ரயில் மோதி இளைஞர் உயிரிழந்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவை வழியே வந்துள்ளார்.அப்போது புகையிரதக் கடவை மூடப்பட்டிருந்தும், அவர் சற்றும் யோசிக்காமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தது. இதனால் அவரும் கீழே விழுந்தார்.அப்போது வேகமாக ரயில் வந்துகொண்டிருந்த நிலையில் ரயில் அருகில் வருவதற்குள் தனது மோட்டார்சைக்கிளை தூக்க முயற்சித்துள்ளார். எனினும் ரயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், மோட்டார்சைக்கிளை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார். ஆனாலும் ஒரு நொடிப்பொழுதில் இளைஞரை ரயில் மோதித்தள்ளியது. வேகமாக வந்த ரயிலில் சிக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் காட்சி ரயில்வே பகுதியிலிருந்த சிசிரிவி காணொளியில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்தக் காணொளியில் இளைஞர் ரயிலில் சிக்கிய காட்சி பதறவைத்துள்ளது. இவ்வாறான ரயில் விபத்துக்கள் இலங்கையில் தற்போது பரவலாக அதிகரித்து வருகின்றது. எனவே இதுபோன்ற விபத்துக்களில் சிக்காமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.