• Apr 19 2026

ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி பலி! - இலங்கையில் நடந்த துயரம்

Chithra / Apr 19th 2026, 2:48 pm
image

பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி ஒருவர் உயிரிழந்தார். 


அஹங்கம, கபலான ரயில் கடவையில் இன்று (19) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


குறித்த பெண் மின்சார மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


எவ்வாறாயினும் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், ரயில் கடவையின் சமிக்ஞை விளக்குகள் இயங்கிய நிலையில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 


இச்சம்பவத்தில் 23 வயதுடைய ரஷ்ய பெண் ஒருவரே உயிரிழந்தார். 


சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி பலி - இலங்கையில் நடந்த துயரம் பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி ஒருவர் உயிரிழந்தார். அஹங்கம, கபலான ரயில் கடவையில் இன்று (19) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் மின்சார மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், ரயில் கடவையின் சமிக்ஞை விளக்குகள் இயங்கிய நிலையில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இச்சம்பவத்தில் 23 வயதுடைய ரஷ்ய பெண் ஒருவரே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement