• Apr 17 2026

முல்லைத்தீவில் வெடிமருந்துடன் இளைஞன் கைது

Chithra / Feb 25th 2026, 9:18 pm
image


முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் C4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம்  மாலை கள்ளப்பாடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர் கள்ளப்பாடு தெற்கு பகுதியை சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து சுமார் 2 கிலோ 700 கிராம் அளவுடைய C4 வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன், சந்தேகநபர் நாளையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் வெடிமருந்துடன் இளைஞன் கைது முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் C4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்றையதினம்  மாலை கள்ளப்பாடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் கள்ளப்பாடு தெற்கு பகுதியை சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிருந்து சுமார் 2 கிலோ 700 கிராம் அளவுடைய C4 வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன், சந்தேகநபர் நாளையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement