• Apr 12 2025

யாழில் பிரசார கூட்டத்திற்கு செல்வதற்கு தயாரான இளைஞன் மீது தாக்குதல்!

Tamil nila / Oct 20th 2024, 9:13 pm
image

யாழில் பிரசாரக் கூட்டம் ஒன்றிற்கு செல்வதற்கு தயாரான இளைஞன் மீது இன்று மாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் வலிகாமம் மேற்கு பகுதியில் இன்று மாலை நடைபெற்ற சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு செல்வதற்கு தயாராகியுள்ளார். இதன்போது அங்கிருந்த இன்னொரு இளைஞனுக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்நிலையில் தலையில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். வட்டுக்கோட்டை பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பிரசார கூட்டத்திற்கு செல்வதற்கு தயாரான இளைஞன் மீது தாக்குதல் யாழில் பிரசாரக் கூட்டம் ஒன்றிற்கு செல்வதற்கு தயாரான இளைஞன் மீது இன்று மாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் வலிகாமம் மேற்கு பகுதியில் இன்று மாலை நடைபெற்ற சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு செல்வதற்கு தயாராகியுள்ளார். இதன்போது அங்கிருந்த இன்னொரு இளைஞனுக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் தாக்குதல் நடாத்தப்பட்டது.இந்நிலையில் தலையில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். வட்டுக்கோட்டை பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement