• Nov 22 2024

வீசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞருக்கு நெருக்கடி; போராட்டம் வெடிக்கும்! ஜே.வி.பி. எச்சரிக்கை

Chithra / May 8th 2024, 9:41 am
image


வீசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ள நிலையில் தவறுகளை அரசாங்கம் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, அந்த இளைஞருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அரசாங்கம் மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என ஜே வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்  எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  உரையாற்றும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கான வீசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் தனி ஒருவனாக வெளிப்படுத்தியுள்ளார்.

அரசமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளார். 

அந்த இளைஞர் குறிப்பிட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியமை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்தியதன் பின்னரே அமைச்சரவை பழைய முறைக்கு விசா விநியோகிக்கத் தீர்மானித்துள்ளது.

எனவே, அரசாங்கம் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து அந்த இளைஞருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் அந்த இளைஞருக்குச் சார்பாகச் செயற்படுவார்கள்.

அரசுக்கு எதிராக மீண்டும் ஒன்றிணைவார்கள். அரசு மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். 

மேலும், கடந்த கால நிகழ்வுகளை அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும்  விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். 

வீசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞருக்கு நெருக்கடி; போராட்டம் வெடிக்கும் ஜே.வி.பி. எச்சரிக்கை வீசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ள நிலையில் தவறுகளை அரசாங்கம் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, அந்த இளைஞருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அரசாங்கம் மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என ஜே வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்  எச்சரித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று  உரையாற்றும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.வெளிநாட்டவர்களுக்கான வீசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் தனி ஒருவனாக வெளிப்படுத்தியுள்ளார்.அரசமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளார். அந்த இளைஞர் குறிப்பிட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியமை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்தியதன் பின்னரே அமைச்சரவை பழைய முறைக்கு விசா விநியோகிக்கத் தீர்மானித்துள்ளது.எனவே, அரசாங்கம் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து அந்த இளைஞருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் அந்த இளைஞருக்குச் சார்பாகச் செயற்படுவார்கள்.அரசுக்கு எதிராக மீண்டும் ஒன்றிணைவார்கள். அரசு மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். மேலும், கடந்த கால நிகழ்வுகளை அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும்  விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement