• Apr 23 2026

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Ziya / Apr 23rd 2026, 10:02 am
image

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற களஞ்சியசாலை சான்றுப் பொருட்களை மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் நீதிவான் ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.


நேற்று (22) இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேகநபரான முன்னாள் நீதிவான் நகர்த்தல் மனு ஊடாக முன்னிலையாகியிருந்தார். 


இதன்போது, களுவாஞ்சிக்குடி நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன், இவ்வழக்கிலிருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்ததுடன், புதிய நீதிவானை நியமிக்க நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தார்.


பொதுச் சொத்துக்களைக் கையாடல் செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே சம்மாந்துறை நீதிவானாகக் கடமையாற்றிய போதே இவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.


மேலதிக விசாரணைகளுக்காக அவரை எதிர்வரும் 12 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் நீடிப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற களஞ்சியசாலை சான்றுப் பொருட்களை மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் நீதிவான் ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.நேற்று (22) இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேகநபரான முன்னாள் நீதிவான் நகர்த்தல் மனு ஊடாக முன்னிலையாகியிருந்தார். இதன்போது, களுவாஞ்சிக்குடி நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன், இவ்வழக்கிலிருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்ததுடன், புதிய நீதிவானை நியமிக்க நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தார்.பொதுச் சொத்துக்களைக் கையாடல் செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே சம்மாந்துறை நீதிவானாகக் கடமையாற்றிய போதே இவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.மேலதிக விசாரணைகளுக்காக அவரை எதிர்வரும் 12 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

Advertisement